
சந்திர பகவானின் முழு ஆதிக்கம் நிறைந்த நாளாக தான் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்று கூறலாம். அதிலும் ஆன்மீக ரீதியாக பலவிதமான வழிபாடுகளையும் அன்றைய நாளில் செய்வது உண்டு. அந்த வகையில் ஆனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியை நாம் குருபூர்ணிமா என்று கூறுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் இந்த முறை வரக்கூடிய ஆணி பௌர்ணமி என்பது குருவிற்குரிய நாளான வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இதற்கு கூடுதல் சிறப்பு உண்டாகும். அப்படிப்பட்ட நாளில் சந்திர பகவானை குருவாக நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூறினால் போதும், பணவரவு பல மடங்கு பெருகும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.பண வசியத்தை ஏற்படுத்தும் மந்திரம்ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த கிரகங்களுக்குரிய மந்திரங்களும் இருக்கின்றன. அந்த மந்திரங்களை முழுமனதோடு நாம் கூறும் பொழுது அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் படிப்படியாக விலகுவதோடு அந்த கிரகங்கள் நமக்கு நன்மையையும் செய்யும். அந்த வகையில் சந்திர பகவான் மனோகாரகனாக திகழ்கிறார். எந்த ஒரு செயலையும் நாம் தெளிவாக செய்ய வேண்டும், சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்முடைய மனம் சரியானபடி யோசிக்க வேண்டும். அந்த மனத்தை ஆளக்கூடியவராக தான் சந்திர பகவான் திகழ்கிறார். மனம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனை இருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் சந்திர பகவானை வழிபாடு செய்யும்பொழுது அந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பௌர்ணமி நாளன்று நாம் கூறக்கூடிய இந்த ஒரு மந்திரம் நம்முடைய பணவரவை பெருக்கும். – Advertisement -ஜூன் மாதம் பத்தாம் தேதி வியாழக்கிழமை ஆனி மாதத்தின் 26ஆம் நாள் சந்திர பகவானின் முழு ஆதிக்கம் நிறைந்த பௌர்ணமி வருகிறது. இந்த பௌர்ணமி என்பது அன்றைய தினம் முழுவதும் பரிபூரணமாக இருக்கிறது. அதனால் இந்த ஒரு மந்திர வழிபாட்டை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் முடிந்த அளவிற்கு ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்துவிட்டு சொல்வது மிகவும் நல்லது. இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை கூறினால் போதும்.அதோடு மட்டுமல்லாமல் ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் சிவப்பு அல்லது நீல நிற பேனாவை பயன்படுத்தி இந்த மந்திரத்தை ஒரே ஒரு முறை எழுதி அதை கையில் வைத்துக்கொண்டு முழு மனதோடு சந்திர பகவானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த பேப்பரை மடித்து வீட்டில் எந்த இடத்தில் பணம் வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் வைக்க வேண்டும். சந்திர பகவானின் பீஜ மந்திரம் நிறைந்த இந்த பேப்பர் எந்த அளவிற்கு பணத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு பணவரவு என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும். – Advertisement – மந்திரம்“ஓம் ஸ்ரீம் சம் சந்திராய தனம் பணம் வசி வசி”இதையும் படிக்கலாமே: மன பயம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்சந்திர பகவானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பௌர்ணமி நாளன்று ஒரே ஒரு முறை கூறுபவர்களுக்கு பண வசியம் ஏற்பட்டு பண வரம் பல மடங்கு பெருக்க ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam