
மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீங்க. நம்பிக்கையான இடம் என்று தெரிந்தால் கூட இன்று பணம் நகை, சொத்து பத்திரம் இதுபோல ஏதாவது ஒரு விஷயத்தில் ஏமாறுவதற்கு, நஷ்டமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இன்று சிக்கலான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லா விஷயத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து விலகும். பெரிய அளவில் பிரச்சினை வராது. சின்ன சின்ன பிரச்சனைகள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை கடவுள் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாள். சிந்தித்து செயல்படுவீர்கள். வரக்கூடிய பிரச்சனையை தடுத்து நிறுத்தும் அளவுக்கு உங்களுடைய சாதுரியமான திறமை வெளிப்படும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். நிதி நிலைமை உயரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள், உயர் இடத்தில் நல்ல பெயரையும் வாங்குவீர்கள். முன்னேற்றத்திற்கு இன்று பிள்ளையார் சுழி போடும் நாள். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன தோல்வியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. எதையும் எதிர்த்து போராட சின்ன தைரியம் உங்களுக்கு தேவை. இறைவழிபாடு நிச்சயம் உங்களுக்கு அந்த தைரியத்தை கொடுக்கும். இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டே இன்றைய நாளை தொடங்குங்கள்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் இருக்கும். வேலையில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் விருப்பம் இல்லாமல் ஏதோ ஒரு முடிவை எடுப்பீர்கள். ஆர்வம் இல்லாமல் இந்த நாளை கழிப்பீர்கள். இதனால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இன்று கவனக்குறைவாக ஒரு வேலையை கையில் எடுக்க வேண்டாம். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எல்லாவற்றிலும் உங்களுடைய பெயர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்கள் இன்று செலவை குறைக்க வேண்டும். ஷாப்பிங்க்கு போகாதீங்க. தேவையில்லாத பொருட்களை ஆசைக்காக மட்டும் வாங்கவே கூடாது. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நன்றாக நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. பெரிய அளவில் லாபம் ஏற்படவும் வாய்ப்புகள் இல்லை.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு முடிவை தீர்க்கமாக எடுக்க முடியாது. மனது அங்கும் இங்குமாக அலைபாயும். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படும். இதனால் சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும் கவனத்தோடு இருங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வார்த்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்ல வேண்டாம். பிள்ளைகளுடைய போக்கை கவனித்துக் கொள்ளுங்கள்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். அலைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான தூக்கத்தை அடைவீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam