
ஒவ்வொரு மாதமும் ஆன்மீக ரீதியாக பலவிதமான அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய மாதமாகவும், ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதம் என்பது அம்மனை வழிபாடு செய்வதற்குரிய மாதம். அதிலும் குறிப்பாக மாரியம்மன், சக்தி மாரியம்மன், முத்து மாரியம்மன் என்று அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக இந்த ஆடி மாதம் திகழ்கிறது. ஆடி மாதத்தில் தான் அனைத்து அம்மன் ஆலயங்களில் தீமிதி திருவிழா, கரகம் எடுப்பது, பூச்சொரிதல், குண்டம் இறங்குவது, கூழ் ஊற்றுவது போன்ற பலவிதமான விசேஷங்கள் நடைபெறும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.ஆடி மாத மந்திரம்இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய தெய்வங்களுள் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக தான் அம்மன் திகழ்கிறார். நம்மை பெற்ற தாய் நமக்கு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல்தான் அம்மனும் நம்மைப் பெற்ற தாய் தான். நம்மை பெற்ற தாய் எந்த அளவிற்கு பாதுகாக்கிறார்களோ அதே போல் தான் அம்மனும் நம்மை அவளின் குழந்தையாகவே பாவித்து காப்பாற்றுகிறார். முழு மனதோடு அவளை சரணாகதி அடைந்து அவளிடம் நம்முடைய கஷ்டங்களை கூறினால் அவள் தாயாக இருந்து அந்த கஷ்டங்களை தீர்த்து வைப்பாள். – Advertisement -அப்படிப்பட்ட அம்மனுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை 27 முறை ஆடி மாதம் முழுவதும் நாம் கூற வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். தலைக்கு தான் குளிக்க வேண்டும் என்று இல்லை. சாதாரணமாக குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை அம்மனை மனதார நினைத்துக் கொண்டு கூறினாலே போதும். வீட்டில் இருக்கக்கூடிய வறுமையும், கஷ்டமும், எதிர்மறை ஆற்றல்களும் முற்றிலுமாக நீங்கி செல்வ செழிப்புடன் அனைத்து விதமான சம்பத்துகளையும் பெற்று வாழ முடியும். முடிந்த அளவிற்கு அசைவம் சாப்பிட்டு விட்டு இந்த மந்திரத்தை கூறுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். காலை நேரத்திலேயே கூறுவது என்பது மிகவும் உகந்தது. காலையில் முடியவில்லை என்பவர்கள் மாலை நேரத்தில் இந்த மந்திரத்தை கூறலாம். பெண்கள் மாதவிடாய் சமயமாக இருக்கும் பட்சத்தில் இந்த மந்திரத்தை கூறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தில் பலவிதமான பீஜ மந்திரம் சேர்ந்திருக்கிறது என்பதால் சுத்தமாக இருக்கும் பொழுது கூறுவது என்பது நல்ல பலனைத் தரும்.மந்திரம்“ஓம் ஐம் ஹ்ரீம் க்ரீம் க்லீம் ஸ்ரீம் முத்துமாரி தேவ்யை நமஹ” – Advertisement – இதையும் படிக்கலாமே: எதிரிகள் விலக தேய்பிறை சஷ்டி மந்திரம்நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைப்பதற்குரிய பீஜ மந்திரங்களை உள்ளடக்கிய இந்த மந்திரத்தை முழுமனதோடு ஆடி மாதம் முழுவதும் யார் ஒருவர் கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கை அம்மனின் அருளால் சிறப்பாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam