இன்றைய ராசிபலன் – 18 ஜூலை 2025

இன்றைய ராசிபலன் – 18 ஜூலை 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இன்று போட்டி பொறாமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு நடக்கும் நல்லதை வெள்ளை மனதோடு, வெளி ஆட்களிடம் முழுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்றைய தினம் சில ஒளிவு மறைவுகள் இருந்தால் மட்டுமே, பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும். வேலையில் வியாபாரத்திலும் நிதானம் தேவை. – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய பணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாராக்கடன் வசூல் ஆகும். உங்களுடைய கடன் சுமை தீரும். நீங்கள் அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. லாபம் நிறைந்த நாளாகவும் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பண வரவு பொருள் வரவு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் ஏற்படும். பெரியவர்களுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்வதற்கு இந்த நாளில், ஒரு பிள்ளையார் சுழி போடுங்கள். வேலையில் பிரமோஷன், வியாபாரத்தில் முன்னேற்றம் இதுபோல பேச்சுக்களை இன்று துவங்கினால் அது உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். செலவுக்கு ஏற்ற வருமானம் கையை வந்து சேரும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபம் சரியாகும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. அதிக கோபத்தால் சில நல்ல விஷயங்களை நீங்கள் இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள். அம்மனை கும்பிடுங்கள். எதிலும் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டாம். யாரைப் பற்றியும் அவதூறு பேச வேண்டாம்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு தேவையற்ற பயம் பதட்டம் இருக்கும். காலையில் அம்பாள் வழிபாடு செய்து விட்டு, உங்களுடைய வேலையை துவங்குங்கள். நிதானத்தை இழக்காதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சை, எதிர்த்துப் பேச நாலு பேர் கட்டாயம் இருப்பாங்க. அவர்களை சமாளிப்பதிலேயே இன்றைய பொழுது செல்லும்‌. குடும்ப சண்டைகளை பெரிசாக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். வீண் செலவுகளை செய்யாதீர்கள்.மகரம்மகர ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைக்காத நல்லது ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு நடக்கும். இறையருள் பரிபூரணமாக கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். கடன் சுமை தீரும் நிதி நிலைமை சீராகும்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கடன் சுமை தீரும். பெற்றவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.மீனம்மீன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவசரப்படக்கூடாது. முதலீடு செய்வதை இன்றைய நாளில் தவிர்த்து விட வேண்டும். யாரிடமும் கைநீட்டி கடன் வாங்காதீங்க. தேவையில்லாத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் எதுவாக இருந்தாலும் முன்பின் சிந்தித்து செயல்படுங்கள்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top