சக்கரை வள்ளி கிழங்கு பான் கேக் செய்முறை

சக்கரை வள்ளி கிழங்கு பான் கேக் செய்முறை

Qries


சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு கிழங்காக திகழ்வதுதான் சர்க்கரைவள்ளி கிழங்கு. இந்த கிழங்கை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியமும், குடல் ஆரோக்கியமும் மேம்படும். இதில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. மேலும் இது எடை இழப்பையும் உண்டாக்குவதோடு முதுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சக்கரவள்ளி கிழங்கை பயன்படுத்தி காலை நேர உணவாகவும் மாலை நேர சிற்றுண்டி ஆகவும் தயார் செய்யக்கூடிய ஒரு பான் கேக்கை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்சர்க்கரை வள்ளி கிழங்கு – 200 கிராம்ரவை – 1/2 கப்சர்க்கரை – 1/4 கப்,பால் – 1/2 கப்உப்பு – ஒரு சிட்டிகை – Advertisement -செய்முறைமுதலில் சர்க்கரை வள்ளி கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி வேக வைப்பது போல் நன்றாக குறைந்தது பத்து நிமிடமாவது வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக இதனுடன் ரவை, சர்க்கரை, காய்ச்சிய பால் மூன்று சேர்த்து இதனுடன் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து இருபதிலிருந்து முப்பது நிமிடம் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை திறக்கும் பொழுது மிகவும் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம். இப்பொழுது கெட்டியான மாவு பதம் கிடைத்திருக்கும். அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு நெய்யை ஊற்றி நெய் உருகியதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி தோசையாக ஊற்றாமல் சற்று கனமாக பான் கேக் போல் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒருமுறை நன்றாக வெந்ததும் அதை திருப்பிப் போட்டு மறுபடியும் அதற்கு லேசாக நெய்யை ஊற்றி வேக வைத்து எடுத்தால் மிகவும் சுவையான சர்க்கரைவள்ளி பான் கேக் தயாராக இருக்கும். – Advertisement – இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வித தயக்கமும் இன்றி உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவில் இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் விட்டமின் சி, விட்டமின் பி5, விட்டமின் பி6 போன்ற உயிர் சத்துக்களும் இதில் அதிக அளவில் இருப்பதால் அனைவரும் கண்டிப்பான முறையில் தங்களுடைய உணவின் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கிழங்காகவே இந்த கிழங்கு திகழ்ந்தது.இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான தேங்காய் பால் ரெசிபிஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் தேவை என்றாலும் அதை எப்படி செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள் என்பதை உணர்ந்து செய்து கொடுப்பதுதான் சிறப்பு என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top