
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்குவதற்கு பிரதோஷம் என்பது ஒரு மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த உலகத்தையே கஷ்டத்திலிருந்து காப்பாற்றியவர் சிவபெருமான் என்பதால் அன்றைய நாளில் அந்த பிரதோஷ நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்களில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள் என்றும் அந்த நேரத்தில் நாமும் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளோடு இவர்கள் அனைவரின் அருளையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பிரதோஷ நாளில் நம்முடைய தலையெழுத்தை மாற்றுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கும் தோஷத்திற்கும் நம்முடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கின்றன. இந்த கர்ம வினைகளை நீக்கி நமக்கு மோட்சத்தை அளிக்கக்கூடிய தெய்வமாக தான் சிவபெருமான் திகழ்கிறார். சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறையும் என்றும் அதனால் நமக்கு நல்லதொரு மார்க்கம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக பிரதோஷ நாளும் உகந்த நேரமாக பிரதோஷ நேரமும் திகழ்கிறது. இந்த நேரத்தில் மறவாமல் வீட்டிலேயோ அல்லது ஆலயத்திலேயோ நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். – Advertisement -ஆடி மாதத்தின் வளர்பிறை பிரதோஷமாக இந்த பிரதோஷம் திகழ்கிறது. இது ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட புதன்கிழமை அன்று பிரதோஷம் வருவது என்பது மிகவும் நல்ல பலனை தரும். அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திர வழிபாட்டை நாம் செய்யலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய இயலவில்லை என்பவர்கள் பிரதோஷ நேரத்தில் செய்யலாம். பிரதோஷ நேரத்தில் செய்ய இயலவில்லை என்பவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம்.இந்த மந்திர வழிபாட்டை நாம் ஆலயத்திற்கு சென்று அங்கு அமர்ந்தும் செய்யலாம். வீட்டில் பூஜையறையில் அமர்ந்தும் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் அமர்ந்து செய்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் லிங்கத்திற்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து தீபமேற்றி வைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும். ஆலயத்திற்கு செல்பவர்கள் தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களையும் அலங்கார பொருட்களையும் வாங்கி கொடுத்து அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். – Advertisement – மந்திரம்“ஓம் ஹ்ரீம் சிவாய குரூப்யோ நமஹ”இதையும் படிக்கலாமே: துன்பங்களை தூள் தூளாக்கும் கருட பஞ்சமி மந்திரம்முழுமனதோடு சிவபெருமானை நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி இந்த மந்திரத்தை யார் ஒருவர் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் உச்சரிக்கிறார்களோ அவர்களுடைய மோசமான தலையெழுத்தும் நல்ல விதமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam