
இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. இன்றைய நாளில் நம்மில் பலரும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்திருப்போம். விரதம் இருந்திருப்போம். அபிஷேகங்களில் கலந்து கொண்டிருப்போம். இன்னும் சிலரோ வீட்டிலேயே விநாயகப் பெருமானின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்திருப்போம். இப்படி எந்த முறையில் வழிபாடு செய்திருந்தாலும், விரதம் இருந்திருந்தாலும், விரதம் இருக்காவிட்டாலும், வழிபாடு செய்யவில்லை என்றாலும் இன்று இரவு தூங்கு முன் இந்த மந்திரத்தை கூற காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.காரிய தடையை நீக்கும் மந்திரம்நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கி வெற்றிகளை தருவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அதனால்தான் நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்கிறோம். அப்படிப்பட்ட விநாயகருக்கு உரிய மிகவும் சிறப்பான வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று நாம் கண்டிப்பாக முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சங்கடங்களும் தீரும். ஒருவேளை வழிபாடு செய்யவில்லை என்றாலும் இந்த ஒரு மந்திரத்தை இன்று இரவு கூறுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய காரிய தடைகள் நீங்கும். – Advertisement -காரிய தடையை நீக்கி வெற்றிகளை அருளக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான். அவருக்குரிய திதியான சதுர்த்தி திதி, அதுவும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.இந்த சங்கடஹர சதுர்த்தி என்பது மாதத்திற்கு ஒருமுறை வரும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த வருடம் முழுவதும் விரதம் இருந்த பலனை பெற முடியும் என்று கூறப்படுகிறது. நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய தடைகளும் பிரச்சனைகளும் தீருவதற்கு விநாயகப் பெருமானின் அருள் கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், நவக்கிரகங்களாலும் கர்ம வினைகளாலும் ஏற்பட்ட காரியங்களை நீக்குவதற்கும் இந்த ஒரு மந்திரம் நமக்கு உதவி செய்யும். – Advertisement – இந்த மந்திரத்தை இன்று இரவு நாம் படுக்கச் செல்வதற்கு முன் கூறிவிட்டு படுத்து உறங்க வேண்டும். மூன்று முறை கூறினால் போதும். எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கூறலாம். ஏன் நாம் படுக்கக் கூடிய இடத்திலேயே அமர்ந்து கொண்டு விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து கூறிவிட்டு படுத்து உறங்கினாலும் தவறு இல்லை. பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்து தான் இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. இந்த மந்திரத்தை கூறிவிட்டு படுத்து உறங்க வேண்டும் அவ்வளவுதான். முழுமனதோடு விநாயகர் பெருமானை நினைத்து மூன்றே மூன்று முறை கூற வேண்டும். காரிய தடையை நீக்கக்கூடிய அற்புதமான மந்திரமாக இந்த மந்திரம் திகழ்கிறது.மந்திரம்“அவ்வும் கணபதயே நமஹ”இதையும் படிக்கலாமே: சக்தி வாய்ந்த மகா மந்திரம்சக்தி வாய்ந்த இந்த மூன்றெழுத்து மந்திரத்தை மூன்று முறை இன்று இரவு கூறுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை விநாயகர் பெருமான் தகர்த்தெறிவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam