
எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலில் வெற்றியடைய வேண்டும் என்று தான் நினைப்போம். வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய செயல்களை மட்டும் தான் செய்வோம் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட செயல்களில் ஏதேனும் தடைகள் ஏற்படுகிறது என்றாலோ நம்மை அறியாமலேயே அந்த செயல் நடைபெறாமல் போய்விடுமோ என்ற பயம் ஏற்பட்டாலோ அந்த பயத்தை நீக்குவதோடு அந்த செயலில் இருக்கக்கூடிய தடைகளை நீக்குவதற்கும் முருகப்பெருமானின் ஒரு மந்திரம் நமக்கு உதவி செய்யும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.வெற்றிகளை குவிக்கும் முருகன் மந்திரம்இன்றைய காலத்தில் பலரது பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார். முருகப்பெருமானை நினைத்து பலரும் பலவிதமான வேண்டுதல்களை முன்வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானை நினைத்து நாம் பலவிதமான வழிபாட்டு முறைகளை மேற்கொள்கிறோம். செவ்வாய் கிழமை வழிபாடு, கிருத்திகை வழிபாடு, சஷ்டி வழிபாடு என்று கூறிக்கொண்டு செல்லலாம். இதில் அனுதினமும் வழிபாடு செய்யும் முறையும் இருக்கிறது, நமக்கு பிரச்சனைகள் வரும் பொழுது வழிபாடு செய்து அந்த பிரச்சினையில் இருந்து விடுபடும் வழிமுறையும் இருக்கிறது. எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் முருகனை முழுமனதோடு நம்பி வழிபாடு செய்தால் அந்த வழிபாட்டிற்குரிய பலனை நம்மால் நிச்சயம் பெற முடியும். – Advertisement -அந்த வகையில் இன்றைய தினம் நாம் முருகனின் மந்திர வழிபாட்டை பற்றி நான் பார்க்கப் போகிறோம். இந்த மந்திர வழிபாட்டை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஏதாவது ஒரு செயலை செய்யப் போகிறோம், அந்த செயலில் எந்தவித தடைகளும் வரக்கூடாது, அந்த செயலில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த செயலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே இந்த மந்திரத்தை மனதிற்குள் கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் முருகனின் அருளால் அந்த செயலில் வெற்றிகள் உண்டாக்கும் என்பது உறுதி.இந்த மந்திர வழிபாட்டை இந்த இடத்தில்தான் கூற வேண்டும், இந்த இடத்தில் கூறக்கூடாது என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. இவ்வளவு நேரம் இத்தனை முறைதான் கூற வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. எங்கு நமக்கு முருகனின் அருள் வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கு இந்த மந்திரத்தை நாம் கூறலாம். முழுமனதோடு முருகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை நாம் கூறினோம் என்றால் முருகனின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் தவிடு பொடி ஆகும் என்று கூறப்படுகிறது. – Advertisement – மந்திரம்” ஓம் ஐம் சம் சரவணபவாய நமஹ “இதையும் படிக்கலாமே: காரிய தடையை நீக்கும் மந்திரம்எளிமையான இந்த மந்திரத்தை நம்முடைய மனதிற்குள் முருகப்பெருமானை நினைத்து கூறிக் கொண்டே இருக்கும் பொழுது முருகனின் அருளால் எதை நினைத்து கூறுகிறோமோ அது நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam