நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கும். கஷ்டம் இல்லாத நபர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக தொடர்கதை போல ஏதாவது ஒரு கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். ஒரு கஷ்டத்தை சமாளித்து வெளியே வருவதற்கு உள்ளாகவே மற்றொரு கஷ்டம் அதைவிட பெரியதாக வந்து நிற்கும். இப்படி வரக்கூடிய கஷ்டங்களால் வாழ்வதற்கே விருப்பமில்லை என்று கூறுபவர்கள் கூட தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக் கொள்வதற்கு சிவபெருமானின் அருள் இருந்தால் போதும். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை பெறுவதற்கு கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.கஷ்டங்களை தீர்க்கும் மந்திரம்காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய காரியம் நம்முடைய வாழ்க்கையே மாற்றும் என்று கூறப்படுகிறது. இது அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. அதனால் தான் பலரும் காலையில் எழுந்தவுடன் சில குறிப்பிட்ட பொருட்களில் கண் விழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல் ஒரு சிலர் காலையில் எழுந்ததும் தங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தையோ நாமத்தையோ கூறிவிட்டு பிறகு அன்றைய நாளை தொடங்க ஆரம்பிப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த நாள் சிறப்பான நாளாக அமையும் என்று கூறப்படுகிறது. – Advertisement -அந்த வகையில் அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து நாம் விடுபடுவதற்கும் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கும் காலையில் எழுந்ததும் சிவபெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் கூறலாம். ஒரு முறை தான் கூற வேண்டும் என்று இல்லை. நம் மனதிற்கு எத்தனை முறை கூற வேண்டும் என்று தோன்றுகிறதோ அத்தனை முறை கூறலாம். அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளின் எண்ணிக்கையை பொறுத்துக் கூட இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை தினமும் கூறுவது என்பது விரைவில் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும்.தினமும் கூற இயலாது என்பவர்கள் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி, திங்கட்கிழமை போன்ற நாட்களில் கூறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நாளைய தினம் சிவபெருமானுக்குரிய தேய்பிறை பிரதோஷம் வருகிறது. இந்த நாளில் நாம் இந்த மந்திரத்தை கூற ஆரம்பிப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். காலையில் எழுந்து கண்விழித்ததும் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம். – Advertisement – மந்திரம்” ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசி சேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய நம ஓம் “இதையும் படிக்கலாமே: வறுமையை நீக்கும் ஏகாதசி மந்திரம்எளிமையான இந்த சிவ மந்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். இயலாதவர்கள் சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில் மறவாமல் கூறி வழிபாடு செய்து பாருங்கள். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam