இன்று ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை திருவோண நட்சத்திரம். மேலும் இன்றைய தினத்தில் பிரதோஷமும் இருக்கிறது. பெருமாள் மற்றும் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக இன்றைய நாள் திகழ்கிறது. இந்த நாளில் இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.பெருமாளின் அருளை பெற மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களை நீக்கக்கூடிய நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. மேலும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வ தடைகளையும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வைப்பதற்கு உதவக்கூடியதாக தான் திருவோண நட்சத்திரம் திகழ்கிறது. இவை இரண்டும் ஒரு சேர்ந்து வரக்கூடிய நாள் என்பது மிகவும் அற்புதமான நாள். இந்த நாளில் நாம் சிவபெருமானையும் பெருமாளையும் ஒருசேர வழிபாடு செய்ய அனைத்து விதமான நன்மைகளும் நம்முடைய வாழ்க்கையில் உண்டாக்கும் – Advertisement -இந்த மந்திர வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இன்றைய நாள் முழுவதுமே இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இரவு 12 மணிக்குள் எப்பொழுது உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது பின்வரும் இந்த மந்திரத்தை நாம் குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆவது கூற வேண்டும். அதிகபட்சம் அரை மணி நேரம் கூறலாம். அதற்கு மேலும் கூட கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. கட்டுப்பாடுகளும் கிடையாது.விரதம் இருந்து தான் இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் இருந்து தான் இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலும் செய்யலாம், ஆலயத்திலும் செய்யலாம், நாம் வேலை செய்யக்கூடிய இடத்தில் இருந்து கொண்டு கூட இந்த மந்திர வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். – Advertisement – முதலில் முழு மனதோடு சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் நினைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை 15 நிமிடம் கூற வேண்டும். 15 நிமிடம் கூறிய பிறகு திரும்பவும் மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். மிகவும் எளிமையான இந்த மந்திர வழிபாட்டை இன்றைய தினத்தில் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும், செல்வ செழிப்பு உயரும்.மந்திரம்” ஹரி நமசிவாய “இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் அபிஜித் நட்சத்திர மந்திரம்சக்தி வாய்ந்த இந்த ஒரு மந்திரம் மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமானின் அருளை நமக்கு பரிபூரணமாக கிடைக்கச் செய்யும். முழு மனதுடன் மந்திர உச்சாடலை செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam