சந்திர கிரகண சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்

சந்திர கிரகண சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்



சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாக தான் பௌர்ணமி தினம் திகழ்கிறது. அதனால் தான் பௌர்ணமி தினத்தில் தெய்வீக சக்திகளின் ஆற்றல் என்பது அதிகமாக இருக்கும் என்றும் எந்தவித தீய சக்திகளும் நம்மை அண்டாது என்றும் கூறப்படுகிறது. மேலும் அதனால் தான் பௌர்ணமி தினத்தில் அனைத்து தெய்வ ஆலயங்களிலும் சிறப்பான அபிஷேகங்களும் வழிபாடுகளும் நிகழ்கின்றன. அப்படிப்பட்ட பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் வருகிறது.சந்திர கிரகண சமயத்தில் நம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதீத சக்தி உண்டாகும் என்றும் அதிலும் குறிப்பாக மந்திர வழிபாட்டிற்கு கோடி மடங்கு பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பௌர்ணமியோடு சேர்ந்து வரக்கூடிய சந்திர கிரக நாளான இன்று சந்திர கிரகண சமயத்தில் நம் கூற வேண்டிய ஒரு மந்திரம் சந்திர பகவானின் அருளைப் பெறச் செய்வதோடு நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். – Advertisement -சந்திர கிரகண மந்திரம்செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆவணி பௌர்ணமி நாள் இன்று முழுவதும் பௌர்ணமி திதி என்பது இருக்கிறது. சந்திரகிரகணம் என்பது இரவு 9:57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:26 மணி வரை இருக்கிறது. இதில் சந்திரன் முழுமையாக மறையக்கூடிய நேரமாக அதாவது சந்திர கிரகத்தின் உச்ச காலமாக இருப்பது இரவு 11:01 மணியிலிருந்து 11:43 மணி வரை. எந்த ஒரு கிரகண வழிபாட்டை மேற்கொள்வதாக இருந்தாலும் கிரகண நேரம் ஆரம்பித்து முடிவதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கிரகணத்தின் உச்ச காலத்தில் செய்யும்பொழுது அதற்கு அதிக பலன் உண்டாகும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அதனால் சந்திர கிரகணம் தொடங்கிய பிறகு தங்களுக்கு எந்த நேரத்தில் இந்த மந்திர வழிபாட்டை செய்ய இயலுமோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம்.இந்த மந்திர வழிபாட்டிற்கு எந்தவித தடைகளும் கிடையாது. எந்த தீட்டும் இந்த மந்திர வழிபாட்டிற்கு கிடையாது. வீட்டில் ஒருவேளை அசைவம் சாப்பிட்டிருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது வெறும் தரையில் அமராமல் விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு உச்சரிக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – இந்த மந்திரத்தை 20 நிமிடம் உச்சரிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணிக்கை எதுவும் கணக்கு கிடையாது. நிறுத்தி நிதானத்துடன் 20 நிமிடம் சந்திர பகவானை நினைத்தவாறு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாகவே சந்திர பகவானிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அதை கூறிவிட்டு பிறகு இந்த மந்திரத்தை கூற ஆரம்பிக்க வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு மறுபடியும் சந்திர பகவானை நினைத்து உங்களுடைய வேண்டுதலை திரும்பவும் கூறி விரைவில் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.மந்திரம்” ஓம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ “இதையும் படிக்கலாமே: சிவன் மற்றும் பெருமாளின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்சந்திர கிரகண சமயத்தில் நம்முடைய வீட்டில் நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாட்டிற்கு அதீத பலன் இருக்கும். அதனால் சந்திர கிரகண சமயத்தில் சந்திர பகவானை நினைத்து இந்த மந்திரத்தை கூறி வேண்டிய வரத்தை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top