இந்த வார ராசிபலன் 15/09/2025 முதல் 21/09/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 15/09/2025 முதல் 21/09/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!



மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்ப ரொம்ப தெளிவா இருப்பீங்க. யாரும் உங்களை குழப்ப முடியாது. உங்களுடைய வேலையில் குறுக்கிட முடியாது. வியாபாரத்தை தடுத்து நிறுத்த முடியாது. எதிரிகள் மூலம் தொந்தரவுகள் வராது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் அதை சமாளித்து விடலாம். மற்றபடி இந்த வாரம் குழப்பங்களில் இருந்து வெளிவரக்கூடிய வாரம். தெளிவான எதிர்காலத்திற்கு பிள்ளையார் சுழி போட நல்ல காலம் காத்துக் கொண்டிருக்கிறது. தினசரி விநாயகரை கும்பிடுங்கள் மேலும் நல்லது நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் அடுத்தடுத்த வெற்றிகளை சேர்த்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஓட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல போகிறது. வேலையில் ப்ரமோஷன், வியாபாரத்தை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். ஒன்றுக்கு இரண்டு பிரான்ச் கூட ஓப்பன் பண்ணுவீங்க. நல்லது நடக்கும் வாரம். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பார்த்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. தலைகனம் உயரக்கூடாது. தினமும் முருகரை கும்பிடுங்கள். நன்மைகள் உங்களுடன் நிரந்தரமாக இருக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அயராது உழைப்பீர்கள். சொன்ன சொல்லிலிருந்து நிலை தடுமாற மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அப்படி ஒரு கடமை கண்ணியம் கட்டுப்பாடு இருக்கும். உங்களை பார்க்கும் போது, சுற்றி இருப்பவர்களுக்கே மரியாதை வரும். ஆனால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வாராகியை கும்பிடுங்கள். வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிசியான வாரமாக இருக்கும். வேலை வியாபாரம், வீடு என்று எல்லாவற்றையும் கவனிக்க நேரம் பற்றாக்குறையாக இருக்கும். வீட்டில் சுப காரிய வேலைகள் துவங்கும். சுப செலவுகள் உண்டாகும். கொஞ்சம் உடல் சோர்வு வரும். உடல் உபாதைகள் வரும். எந்த அளவுக்கு வேலையில் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவுக்கு ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்க்கையில் இருந்த மிகப்பெரிய சிக்கல் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட பரிசு காத்துக் கொண்டிருக்கிறது. அனுமன் வழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மைகளை அடையலாம். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த வாரம் சுமுகமான வாரமாகத்தான் இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் உயர்ந்த நிலைமைக்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆனால் சில பல எதிரிகளால் தொல்லை வரும். முன்னேறுவதற்கு முன்பு சின்ன சின்ன கசப்பான அனுபவங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தோல்விகளை கண்டு துவண்டு போகாதீங்க. இந்த வார இறுதியில் உங்கள் முயற்சிகளுக்கு எல்லாம் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. நேரத்தை வீணடிக்காமல் இருக்கும் பட்சத்தில் இந்த வாரம் வெற்றியின் உச்சத்தை தொடர்வீர்கள். தினமும் சிவனை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியமும் உறுதியும் அதிகமாக இருக்கும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிப்பீர்கள். கடவுள் உங்களை சோதனை செய்து கொண்டே இருப்பான். பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருப்பான். நீங்கள் பயந்து ஓடவே கூடாது. பிரச்சனைகளை எதிர்த்து போராடி பாருங்கள். வெற்றி காண்பீர்கள். வேலையில் நிதானதோடு இருங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பொறுப்போடு உழைத்தாலே நல்லது நடக்கும். மனதில் உறுதியும், செயலில் நேர்மையும் இருந்தால் இந்த வாரம் நிச்சயம் வெற்றி காணலாம். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு இந்த வாரம் துணையாக இருக்கும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ஒரு கொள்கையோடு வாழ்வீர்கள். எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். பொய் சொல்ல மாட்டீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் எதிரிகளால் பிரச்சனை வரும். இருக்கும் வேலைக்கு பிரச்சனை வரும். குடும்பத்தில் தகராறு வரும். இருப்பினும் நேர்மையை தளர்விட்ராதிங்க. அதுதான் உங்களை காப்பாற்றும். சிரமங்களை எதிர்கொண்டாலும் கடைசியில் ஜெயிக்கப் போவது நீங்கள் தான். அம்மன் வழிபாடு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பம்பரமாக சுழன்று வேலை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான அந்தஸ்து மதிப்பும் மரியாதையும் உயரும். யாரெல்லாம் உங்களை கைநீட்டி பேசினார்களோ, அவர்களெல்லாம் உங்களை கைகூப்பி வணங்குவார்கள். கடவுள் உங்களை அந்த நிலைமைக்கு உயர்த்த போகிறார். ஆனால் ஒருபோதும் தலைகனம் வரக்கூடாது. பெரியவர்கள் பேச்சை மதிக்காமல் இருக்கக் கூடாது. தன்னடக்கம் இந்த வாரம் மிக மிக அவசியம் தேவை. சப்த கன்னியரை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்க இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாக சரியாகும். பிரச்சினை கொடுத்து வந்த மேனேஜர் டிரான்ஸ்பர் ஆகி போயிருவாரு கவலைப்படாதீங்க. வியாபாரத்தை பொருத்தவரை வாரா கடன் வசூல் ஆகும். கைநிறைய லாபம் கிடைக்கும். தினமும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.மகரம்மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூடக்கூடிய வாரமாக இருக்கிறது. உங்களுடைய வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களோடு வியாபாரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட தானாக மீண்டும் வந்து, உங்களோடு வியாபார பரிவர்த்தனை செய்வார்கள். வாரா கடன் வசூலாகும். உங்களுடைய கடன் சுமை குறையும். வீட்டிற்கு பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இந்த வாரம் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கொஞ்சம் வேலை பளு அதிகரிக்கும். ஓய்வு எடுக்க கூட நேரம் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் பைரவரை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இந்த வாரம் நிறைய பேச வேண்டிய சூழ்நிலை உண்டாகும். யாரிடம் பேசினாலும் வாக்குவாதம் வரும். சண்டை வரும். பிரச்சனை வரும். இதையெல்லாம் சமாளித்து வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால், கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எதிரிகளை சமாளிக்க தந்திரமாக செயல்பட வேண்டும். சில பேரை அவர்கள் போக்கில் விட்டு தான் பிடிக்க வேண்டும். சில யுத்திகளை கையாண்டால் மட்டுமே இந்த வாரம் உங்களால் வாழ்க்கையை வழிநடத்த முடியும். ஜாக்கிரதை பொய் சொல்ல வேண்டிய இடத்தில் பொய் சொல்ல வேண்டும். உண்மையை மறைக்க வேண்டிய இடத்தில் உண்மையை மறைக்க வேண்டும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் கவனமாக பேச வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு கொஞ்சம் சோதனையான வாரும்தான். இஷ்ட தெய்வத்தின் கால்களை இருக்க பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் நன்மை நடக்கும் வாரம் தான். நீண்ட நாள் முயற்சி செய்து தோற்றுப் போன விஷயங்களை இந்த வாரம் கையில் எடுங்கள். காரிய தடை விலகக் கூடிய வாரம் இது. புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதிநிலைமை சீராகும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெற்றவர்கள், மனநிறைவே அடைவீர்கள். வேலையை பொருத்தவரை பிரச்சனைகள் வரும். ஆனால் பெருசாக பாதிப்புகள் இருக்காது. பிரச்சனைகளை அடித்து விரட்ட கடவுள் உங்களுக்கு நல்ல தைரியத்தை கொடுக்கப் போகின்றான். போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். போராட்டம் தீவிரம் அடைந்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்க வேண்டாம். எதிர்த்து போராடுங்கள் நல்லதே நடக்கும். பொறுமையை இழக்காதீர்கள். தினமும் அம்மன் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top