மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் செய்த தவறை எண்ணி வருதப்படுவீர்கள். உங்களுக்கான பிரச்சனைகளை புரிந்து, பிரச்சனைக்கு உண்டான தீர்வையும் கண்டுபிடிப்பீர்கள். மனநிம்மதி கிடைக்கும். தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நன்மை நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பற்றி சிந்திப்பீர்கள். லேசாக பொறாமை குணம் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளது. எதுவாக இருந்தாலும் வருமானத்திற்கு மீறிய செலவு நிச்சயம் நல்லது கிடையாது. உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய வருமானம், உங்களுடைய வேலை என்று மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது நல்லது. – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பணப்பற்றாக்குறை தீரும். தேவையான பணம் கையை வந்து சேரும். நீண்ட நாள் கடன் தொகை வசூல் ஆகும். மன நிம்மதியை அடைவீர்கள்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று செல்வ செழிப்பான நாளாக இருக்கும். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அதிகமாக கோபப்படக்கூடாது. தவறு செய்தவர்களுக்கு கூட தண்டனை கொடுக்கக் கூடாது. மன்னிப்பு தான் கொடுக்க வேண்டும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை.கன்னிகன்னி ராசிக்காரர்கள் இன்று மன நிறைவோடு இருப்பீர்கள். யார் உதவி என்று வந்து கேட்டாலும் தட்டாமல் செய்வீர்கள். உங்களுக்குள் ஒரு அன்னை தெரேசா மறைந்து இருப்பது உங்களுக்கே இன்னைக்கு தான் தெரியும். இரக்க குணத்தோடு நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் உங்கள் குடும்பத்திற்கு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஆன்மீக வழிபாட்டில் மனதை ஈடுபடும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம். நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொண்டால் பிரச்சனை இல்லை.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். வேலையை சொன்ன நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கில் இருந்து தவற மாட்டீங்க. நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும் நாள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். கையில் இருந்த இருப்பு கரையும். மனசு கஷ்டப்படும். ஏன்தான் இந்த வேலையை செய்தோமோ என்று சிந்திக்கும் அளவுக்கு கூட சில பேருக்கு மன வருத்தம் உண்டாகும். கவலைப்படாதீங்க. எல்லாம் நன்மைக்கே இறைவனின் மீது பாரத்தை போடுங்கள் வேலையில் அக்கறை காட்டுங்கள்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், வேளையில் நல்ல மதிப்பு மரியாதை கூடக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதை தொட்டாலும் அது வெற்றி அடையும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எந்த வேலையிலும் குழப்பம் இல்லாமல் இருப்பீர்கள். தெளிவாக முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்ய மருத்துவரை அணுகுவது நல்லது.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய வேலையில் முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் லாபத்தை கொடுக்கும். கமிஷன் தொழில் கல்லாக்கட்டும். கொஞ்சம் வசதியாக தான் இன்று வாழ போகிறீர்கள் என்ஜாய் பண்ணுவீங்க.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam