கிருபானந்த வாரியார் அருளிய வாரத்தின் 7 நாட்களுக்கான சக்திவாய்ந்த துதிகள்
எல்லா நாட்களும் இனிய நாளாக அமைய வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பம். ஆனால், அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தடைகளால் நாம் சோர்ந்து போகிறோம். “அருள்செல்வர்” திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், நம்முடைய ஒவ்வொரு நாளையும் மங்களகரமாக மாற்ற, வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏழு எளிய துதிகளை அருளியுள்ளார்.
இவை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும், வயலூர் திருத்தலத்தையும் மையமாகக் கொண்டவை. தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் அந்தந்த நாளுக்குரிய துதியைச் சொன்னால், அன்றைய பொழுது வெற்றிகரமாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை (திருப்பரங்குன்றம்)
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
பலன்: உடல் ஆரோக்கியம் மற்றும் தலைமைப் பண்பு கிடைக்க.
திங்கட்கிழமை (திருச்செந்தூர்)
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
பலன்: மன அமைதி மற்றும் தெளிவான சிந்தனை பெற.
செவ்வாய்க்கிழமை (பழநி)
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
பலன்: கடன் தொல்லை தீரவும், தைரியம் பிறக்கவும்.
புதன்கிழமை (சுவாமிமலை)
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனேஉதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவேபுதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
பலன்: கல்வி, அறிவு மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெற.
வியாழக்கிழமை (திருத்தணி)
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
பலன்: குரு அருள் பெறவும், சுப காரியங்கள் தடையின்றி நடக்க.
வெள்ளிக்கிழமை (பழமுதிர்சோலை)
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்தவள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனேவெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
பலன்: செல்வம் பெருகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்.
சனிக்கிழமை (வயலூர்)
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலாமுனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசேஇனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
பலன்: கிரக தோஷங்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும்.
இதைப் பதிவேற்றியவர்..
Dineshgandhi
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

