நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சீவாத்மாக்களை அமைதியாகத் தன்வசப்படுத்துவது சிவனிற் பிரியாத சக்தி

சீவாத்மாக்களை அமைதியாகத் தன்வசப்படுத்துவது சிவனிற் பிரியாத சக்தி


Last updated on மே 28, 2025

எம்-1323எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது பாகிஸ்தானில் உள்ளதொரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்,ஐ தொகுப்பு 1, பக்கம் 160-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 439-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 9 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த இந்த எழுத்துக்கள் மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக – ப + ளை + ய + ர்; + மோ +  ன + ம்;   (அ)ரு + ள், பளையர் மோனம் (அ)ருள் எனப் படிக்கப்படுகிறது.
இவற்றில் உள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ளை’ என்பது 16-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ய’ என்பது 11-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ர்’ என்பது 12-ஆவது மெய் எழுத்து, ‘மோ’ என்பது 10-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ம்’ என்பது 10-ஆவது மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-ஆவது மெய் எழுத்து ஆகியவையாகும்.
பளையர் : விலங்கு முதலியவற்றை வளை வைத்து பிடிக்கும் வளையர் (வலையர்)மோனம் : அமைதி, பேசாதிருத்தல்(அ)ருள் : பொழிவு, கருணை, நல்வினை, ஏவல் (தூண்டுகை), சிவசக்தி
பொருள்: விலங்கு முதலியவற்றை வளை வைத்து பிடிக்கும் வளையர்களின் அமைதி சிவசக்தி.
பொருள் விளக்கம்: இவ்விடத்து விலங்கு முதலியவற்றை பளையர் என்னும் வளையர் (வலையர்) வளை வைத்து பிடிப்பதென்பது குறிப்பாக அனைத்து சீவாத்மாக்களை அமைதியாகத் தன்வசப்படுத்துவது சிவனிற் பிரியாத சக்தி என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top