நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

போற்றப்படும் தன்மை உள்ளதாகக் கொடுத்த வீரியம் உடம்பு

போற்றப்படும் தன்மை உள்ளதாகக் கொடுத்த வீரியம் உடம்பு


7500 ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது ஒரு பானை ஓடு முத்திரை எண்: ஆ-413யு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பானை ஓடு முத்திரை தற்போது புதுடெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 1, பக்கம் எண்: 99 – லும் இதனுடைய மற்றக் குறிப்புக்கள் பக்கம் எண்: 368 – லும்; பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
நீள் செவ்வக வடிவில் உடைந்துள்ள இந்தப் பானை ஓட்டில் ‘சீ’ என்பதை குறிக்கும் ஒரு சீப்பின் வடிவமும், 8 எழுத்துக்களும் கீறப்பட்டுள்ளன. ‘சீ’ என்பது 1-ஆவது எழுத்துடனும்;,  2-ஆவது, 3-ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்தும், 6-ஆவது எழுத்தின் கீழே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை இடமிருந்து வலமாக:-
(சீ + உ) +( ள்(ளா) + ய் ) +(இ)ட் + டா +(ண் + நி) + ண(ம்). சீ உள்(ளா)ய் (இ)ட்டாண் நிண(ம்)
இவற்றில் ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ள்’ என்பது 16-ஆவது மெய் எழுத்து, ‘ளா’ என்பது 16-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ய்’ என்பது 11-ஆவது மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து, ‘டா’ என்பது 5-ஆவது உயிர்மெய்; எழுத்து, ‘ண்’ என்பது 6-ஆவது மெய் எழுத்து, ‘நி’ என்பது 8-ஆவது உயிர்மெய்; எழுத்து, ‘ண’ என்பது 6-ஆவது உயிர்மெய் எழுத்து.
சீ உள்(ளா)ய் (இ)ட்டாண் நிண(ம்)
சீ – திருமகள், திரு, போற்றப்படும் தன்மை; உள்(ளா)ய் – உள்ளதாக; (இ)ட்டாண் (இட்ட ஆண்) -இட்ட- கொடுத்த, படைத்த் ஆண் – ஆண், வீரியம் ; நிண(ம்) – கொழுப்பு, ஊன், உடம்பு, ஊனீர்.
பொருள்: போற்றப்படும் தன்மை உள்ளதாகக் கொடுத்த வீரியம் உடம்பு.
குறிப்பு: போற்றப்படும் தன்மை உள்ளதாக என்பது பரமாத்மாவின் ஓர் அங்கமான ஆன்மா என்னும் உயிரைக் குறிப்பதாகும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top