Mahalaya Paksham in Tamil
மஹாளய பக்ஷம் என்பது முன்னோர்களுக்கு நன்றியைச் செலுத்தும் முக்கியமான காலம். இக்காலத்தில் பித்ருக்கள் பூமிக்கு வந்து, நாம் செய்யும் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தத்தை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
மஹாளய பக்ஷம் என்றால் என்ன?
மஹாளய பக்ஷம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முன் வரும் 15 தேய்பிறை நாட்கள் [விச்வாவஸு – ஆவணி 23 – புரட்டாசி 6 வரை (08/09/2025 – 22/09/2025) ]. இந்த நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம், தானம் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் சுபமாகக் கருதப்படுகிறது.
மஹாளய பக்ஷ காலமும் (வாக் – பஞ்) சிராத்த பலனும்
தேதி
கிழமை
திதி
சிறப்பு
ச்ரார்த்த பலன்
08 – 09 -2025
திங்கள்
ப்ரதமை
தன லாபம் வரும்
09 – 09 -2025
செவ்வாய்
த்விதியை
சந்தான பாக்கியம் கிட்டும்
10 – 09 -2025
புதன்
திருதியை
நினைத்த வரன் அமையும்
11 – 09 -2025
வியாழன்
சதுர்த்தி
சத்ரு அகற்றுதல்
12 – 09 -2025
வெள்ளி
பஞ்சமி – சஷ்டி
மஹாபரணி
வீடு முதலிய சம்பத்து சேரும் – புகழ் கூடும்
( த்விதிதி – இரண்டு திதிகள் ஒரே நாளில் சம்பாவிக்கின்றது )
13 – 09 -2025
சனி
சப்தமி
தலைமை பதவி கிடைக்கும்
14 – 09 -2025
ஞாயிறு
அஷ்டமி
மத்யாஷ்டமி
நல்ல புத்தி கிட்டும்
15 – 09 -2025
திங்கள்
நவமி
வ்யதீபாதம் – அவிதவாநவமி
நல்ல வாழ்க்கை துணை / பெண் / மருமகள் / பேத்தி அமையும்
16 – 09 -2025
செவ்வாய்
தசமி
நினைத்தது நிறைவேறும்
17 – 09 -2025
புதன்
ஏகாதசி
புரட்டாசி மாதப்பிறப்பு
வித்யை (வேதம்) வளரும்
18 – 09 -2025
வியாழன்
த்வாதசி
ஸன்யஸ்த மஹாளயம்
தங்கம் சேரும்
19 – 09 -2025
வெள்ளி
த்ரயோதசி
கஜச்சாயை
ஐஸ்வரியம், தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், பிள்ளை பேறு, நல் புத்தி, பசு உள்ளிட்ட விவசாய விருத்தி, சுதந்திரமான (பொருளாதார) நிலை அடைவர்
20 – 09 -2025
சனி
சதுர்த்தசி
ஸஸ்த்ர ஹத மஹாளயம்
எதிர்கால சந்ததியினருக்கு நன்மை கிட்டும்
21 – 09 -2025
ஞாயிறு
அமாவாசை
ஸர்வ மஹாளய அமாவாசை
மேற்கூறிய பலன்களும், அதிகமாக ஸ்வர்கத்தையும் அடையும் பேறு கிடைக்கும்
22 – 09 -2025
திங்கள்
ப்ரதமை
பித்ருக்களுக்கு திருப்தி ஏற்படும் (பொது)
யார் செய்ய வேண்டும்?
தந்தை அல்லது முன்னோர்களை இழந்தவர்கள்
பிறந்த மகன் செய்ய வேண்டும்
மகன் இல்லையெனில் மற்ற குடும்ப உறவினர்கள் செய்யலாம்
என்ன செய்ய வேண்டும்?
தர்ப்பணம் – எள், தண்ணீர், தர்ப்பை கொண்டு பித்ருக்களுக்கு அர்ப்பணம்
சிரார்த்தம் – பித்ருக்களுக்கு உணவு பரிமாறும் சடங்கு
அன்னதானம் / பிச்சை / தானம் – பசித்தோருக்கு உணவு வழங்குதல், தேவையானவர்களுக்கு உதவி
யாருக்கெல்லாம் செய்யலாம்?
மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்வது பெற்றோர், தாத்தா, பாட்டி மட்டுமல்லாமல்,
உறவினர்கள்
நண்பர்கள்
குழந்தையில்லா பெரியவர்கள் எல்லோருக்கும் செய்யலாம்.
இவர்கள் காருணிக பித்ருக்கள் என அழைக்கப்படுவர்.
மஹாளய பக்ஷம் செய்வதன் பலன்கள்
பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்
வாழ்க்கைச் சிரமங்கள் குறையும், நன்மைகள் பெருகும்
ஆரோக்கியம் மேம்படும், மருந்துச் செலவு குறையும்
தடைபட்ட காரியங்கள் நடைபெறும்
திருமணத்திற்கு ஆசீர்வாதம் கிடைக்கும்
சுமுகமான மணவாழ்க்கை அமையும்
முக்கியமாக, வம்சம் வளரும், தலைமுறை தலைமுறையாக செழிக்கும்
இந்த மஹாளய பக்ஷ காலத்தில் பித்ருக்களுக்கு சிரமம் இல்லாமல் தர்ப்பணம் செய்ய அமா சர்வமங்களா ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.
மஹாளய பக்ஷம் என்பது ஒரு ஆன்மீக கடமை மட்டுமல்ல, நமது வம்சத்தின் வளத்திற்கும் அமைதிக்கும் காரணமான ஒரு வழிபாடு. இந்த நாட்களில் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம், சிரார்த்தம், தானம் செய்வது நமது வாழ்க்கையில் நன்மைகளை அதிகரிக்க உதவும்.
இதைப் பதிவேற்றியவர்..
Umamaheswari Sivanesan
வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.
Read full bio →
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam