Pooja Room Tips in Tamil

Pooja Room Tips in Tamil


Pooja Room Tips in Tamil
🛕 இறைவன் இல்லா இடம் ஏது? அதனால் தான் இறைவன் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்றனர் முன்னோர்கள்.
🛕 “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயமாக இருப்பது பூஜை அறைதான். இந்த பூஜை அறை பற்றிய சில பயனுள்ள குறிப்புகளை பார்க்கலாம்:
1. பூஜை அறை கடவுள் வாசம் செய்யும் இடமாக உள்ளதால் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம்.
2. கடவுளின் படங்கள், சிலைகள் முதலியவை சீர்பட அமைத்தல் வேண்டும்.
3. காலை, மாலை நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது.
4. எப்போதும் விளக்கு ஏற்றுவதற்கு முன் காமாட்சி விளக்கிற்கு பொட்டு வைத்து பின் ஏற்ற வேண்டும்.
5. உடைந்த கண்ணாடி உடைய சுவாமி படங்கள் இருந்தால் அதை உடனே அப்புறப்படுத்தி கோவில்களில் வைத்தல் வேண்டும்.
6. அனைவரின் பூஜை அறையிலும் முழுமுதற்கடவுளான விநாயகரின் திருவுருவப்படம் இருக்க வேண்டும்.
7. தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜரின் படங்கள் இருந்தால் தெற்கு நோக்கி வைக்க வேண்டும்.
8. ஒருபோதும் தெற்கு நோக்கியவாரு விளக்கை ஏற்றக்கூடாது.
9. அனுமன், காளி, நரசிம்மர் போன்ற உக்ர தெய்வங்களின் படங்கள் வைப்பதை தவிர்த்தல் நல்லது.
10. எந்த கோவிலுக்குச் சென்று நாம் வழிபட்டாலும் முதலில் நம் பூஜை அறை தெய்வங்களை வழிபடுதல் வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்!
நன்றி – திரு.வே.முகிலரசன்.
Also, read

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top