Alms Giving Benefits in Tamil
தானம் செய்வதின் பலன்கள்
உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.
பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
Dhanam Palangal
தானத்தின் பலன்கள்
அன்ன தானம்
கடன் தொல்லைகள் நீங்கும்
அரிசி தானம்
முன்ஜென்ம பாவங்கள் விலகும்
ஆடைகள் தானம்
சுகபோக வாழ்வு அமையும்
பால் தானம்
துன்பங்கள் விலகும்
நெய் தானம்
பிணிகள் நீங்கும்
தேங்காய் தானம்
எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்
தீப தானம்
முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்
தேன் தானம்
புத்திர பாக்கியம் கிட்டும்
பூமி தானம்
பிறவா நிலை உண்டாகும்
பழங்கள் தானம்
மன அமைதி உண்டாகும்
வஸ்திர தானம்
ஆயுள் விருத்தி உண்டாகும்
கம்பளி தானம்
வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்
கோ தானம்
பித்ரு கடன் நீங்கும்
தயிர் தானம்
இந்திரிய விருத்தி உண்டாகும்
நெல்லிக்கனி தானம்
அறிவு மேம்படும்
தங்கம் தானம்
தோஷம் நிவர்த்தியாகும்
வெள்ளி தானம்
கவலைகள் நீங்கும்
கோதுமை தானம்
ரிஷிக்கடன் அகலும்
எண்ணெய் தானம்
ஆரோக்கியம் உண்டாகும்
காலணி தானம்
பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்
மாங்கல்ய சரடு தானம்
தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்
குடை தானம்
எண்ணிய எதிர்காலம் உண்டாகும்
பாய் தானம்
அமைதியான மரணம் உண்டாகும்
காய்கறிகள் தானம்
குழந்தை ஆரோக்கியம் மேம்படும்
பூ தானம்
விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
பொன் மாங்கல்ய தானம்
திருமண தடைகள் நீங்கும்
மஞ்சள் தானம்
சுபிட்சம் உண்டாகும்
எள் தானம்
சாந்தி உண்டாகும்
வெல்ல தானம்
வம்ச விருத்தி உண்டாகும்
தண்ணீர் தானம்
மன மகிழ்ச்சி உண்டாகும்
சந்தன தானம்
கீர்த்தி உண்டாகும்
புத்தகம் தானம்
கல்வி ஞானம் உண்டாகும்
பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன. ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.
ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா? கெட்டவரா? என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam