தைபூசம் திருவிழா | தைப்பூசம் என்றால் என்ன

தைபூசம் திருவிழா | தைப்பூசம் என்றால் என்ன

Qries

தைப்பூசம் என்றால் என்ன ?

பூசம் என்பது 27 நட்சத்திரங்களுக்கும் எட்டாவதாக வருகின்ற நட்சத்திரமாகும். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள் பூச நட்த்திரமாக வருவது இயல்பதான். ஆனால் பூசநட்சத்திரம் முழுநிலவு நாளில் (பௌர்ணமி நாளில் கூடிவருவது தை மாதத்தில்தான். ஆதலால் இதனைத் தைப்பூசம் என்று சிறப்பித்துக் கூறுவர்,

தைப்பூசத் திருவிழா சிறப்பு

தைப்பூசவிழா சிவன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்துநாள் பெருவிழாவாக பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும் சிறப்புடைய சைவசமய விழாக்களுள் இதுவும் ஒன்றாகும். பூர் நட்சத்திரத்திற்கு ஒன்பது நாள் முண்பாக விழாத் தொடங்கப்படும். பூசத்தன்று புண்ணிய ஆறுகளில் நீராடல் செய்து விழாவை நிறைவு செய்வது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும்.

பூசநீராட்டு விழா நடைபெறும் தலங்களுள் குறிப்பிடத்தக்க தலமாக விளங்குவது தஞ்சை வட்டத்திலுள்ள திருவிடை மருதூர் என்னும் தலமாகும்.“பூசம் புகுந்தாடிப் பொலிதழகாயஈசன் உறைகின்ற இடைமரு தீர்தா”

என்று இவ்விழாவைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மேலும், இவரே, இறந்து போன் பூம்பாவை என்னும் பெண்ணை உயிர்பெறச் செய்வதற்காக பாடிய திருப்பதிருத்தில்

“தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய்”

என்று பாடியுள்ளார்.

இதிலிருந்து தைப்பூச விழா தமிழ் நாட்டில் பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.மனுவின் மகன் இரணியவர்மனுக்கு விசன் தரிசனம் கொடுத்ததும், புத்தர் ஞானோதயம் பெற்றதும் இந்த தைப்பூச நன்னாளில் தான்.

வியாழன் என்பது நவகிரகங்களுள் ஒன்று, வியாழன் தேவர்களின் குருவாகப் போற்றப்படுகின்றார். வியாழன் பூசநட்சத்திரத்தின் அதிதேவதை. இவர் அறிவினை உண்டாக்கும் வலிமை பெற்றவர். பூசநாளில் இவரை வழிபட்டால் இவரது அருள் கிடைக்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top