மஹா சிவராத்திரி
அன்னை அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி,அப்பன் சிவனுக்கு ஒரேராத்திரி சிவராத்திரி….
மாதத்தில் ஒரு முறைவரும் சிவராத்திரிமாசிமாதம் வருவதோமஹா சிவராத்திரி….
சிவாய நம என விரதம்இருப்போர்க்கெல்லாம்,அபாயம் நீக்கும் ராத்திரி…
சிவ புராணங்களில்உள்ள கூற்றின் படி,பல நிகழ்வுகள் நடந்தராத்திரி சிவராத்திரி..
பிரளய காலத்தில்பிரமனால் சிஷ்டித்தஅனைத்து உயிர்களையும்அழிவிலிருந்து காப்பாற்ற ,
அன்னை உமாதேவிஅன்போடு விரதமிருந்துஈசனை பூஜித்த ராத்திரிஇந்த சிவராத்திரி…..
தேவர்களும் அசுரர்களும் பார்கடலை கடைந்தபோதுபொங்கிவந்தஆலகால விஷத்தைஅண்டத்தைக் காக்க தன்கண்டத்தில் ஏற்றுநீலகண்டனாய் மாறிய ராத்திரி இந்த சிவராத்திரி
பரமேஸ்வரனின்இடப்பாகத்தை அன்னைபார்வதி பெற்ற தினம்இந்த சிவராத்திரி….
பிரம்ம தேவருக்கும்திருமாலுக்கும் பெரும்ஒளிபிழம்பாய்லிங்கோத்பவராய்காட்சி அளித்த தினம்இந்த சிவராத்திரி…
அர்ஜுனன் சிவனை நினைத்து மூங்கில்காட்டில்,தவம் புரிய,
அர்ஜுனனை அழிக்கபன்றி உருவில் வந்தஅரக்கனை, வேடன் உருவில் வந்த சிவபிரான் அழித்து,
அர்ஜுனனுக்குபாசுபதாஸ்திரம் அளித்தநாள் இந்த சிவராத்திரி…
கண்ணப்பன் தன் கண்களைஈசனுக்கு கொடுத்துமுக்தி அடைந்த நாள்இந்த சிவராத்திரி….
இந்திரன் தேவலோகஅதிபதியான நாளும்இந்த சிவராத்திரியே…
குபேரன் செல்வத்தின்அதிபதியான நாள்இந்த சிவராத்திரி….
மார்கண்டேயனுக்காகஎமனை சிவபிரான்காலால் உதைத்த நாள்இந்த சிவராத்திரி…
புலிக்கு பயந்த வேடன்வில்வ மரத்தில்மேல்ஏறி அமர்ந்து அச்சத்தில் இலைகளை பறித்துப் போடகீழே இருந்த லிங்கத்தில்மேல் பட்டு வேடன் முக்திபெற்றநாள் இந்த சிவராத்திரி…
வில்வ இலைகள்சிவபிரானுக்கு உகந்ததாகமாறிய நாளும்இந்த சிவராத்திரி….
இன்பத்தையும்மங்களத்தையும்நிறைவானவாழ்கையையும் தரும்ராத்திரி இந்த சிவராத்திரி…..
எழுதியவர்: வெ. உமா
நன்றி: வெ. உமா
இதைப் பதிவேற்றியவர்..
Umamaheswari Sivanesan
வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.
Read full bio →
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam


