ஸ்ரீ ராம நவமி
ராம நவமி என்றால் என்ன ?
இப்பண்டிகை பங்குனி புனர்பூச நட்சத்திரத்தில் நவமி திதியன்று வரும். (சிலசமயம் சித்திரை மாதத்திலும் வரலாம்) இது ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை கொண்டாடும் நாள். இதை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறார்கள். வடஇந்தியாவில் நவமிக்கு எட்டு நாட்களுக்கு முன்பே “அகண்ட ராமாயணம்” என ஆரம்பித்து, விடாமல் தொடர்ந்து துளசி ராமாயணம் வாசிப்பார்கள். அவர்கள் பாடும் ராகங்கள் கேட்க காதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
தென்னிந்தியாவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை பத்து தினங்கள் கொண்டாடுவார்கள். சிலர் நவமியன்று விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஸ்ரீராமர் பிறந்த தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை பூஜை செய்து, வருடப் பிறப்பன்று செய்வது போல் வடை பருப்புநீர்மோர், பானகம், பாயஸம் செய்து வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
ஒன்பது நாட்களும் அல்லது ஸ்ரீராம நவமியிலாவது பூஜை செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து வைஷ்ணவ ஆலயங்களில் ராம நவமி உற்சவம் பத்து நாட்கள் வெரு விசையால் கொண்டாடுகிறார்கள், வைனவ திருக்கோயில்களில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை கர்ப உற்சவம் என ஸ்ரீராமநவமி அன்றுடன் முடியும் வண்ணம் பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். மற்றைய திருக்கோயில்களில் ஸ்ரீராமன் பிறந்த ஸ்ரீராமநவமி அன்று உற்சவம் ஆரம்பித்து பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இது ஜனன உற்சவம் என்று அழைக்கின்றனர். இதில் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் என விஷேசங்களை கொண்டாடுகின்றனர்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam