இன்றைய ராசிபலன் – 01 பிப்ரவரி 2025

இன்றைய ராசிபலன் – 01 பிப்ரவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நல்லது கெட்டதை நன்றாக புரிந்து கொள்வீர்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதையும் புரிந்து கொண்டு, யார் யாரிடம் எப்படி பேசி பழக வேண்டுமோ அப்படி பேசி பழகுவீர்கள். நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்யலாம். வேலையில் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்ட வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடித்துக் கொடுப்பதே உங்கள் மரியாதையை பெற்றுக் கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருந்தால் நல்லது. மற்றபடி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதியான நாளாக இன்றைய நாள் அமையும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சந்தோஷம் வரும்போது மனது எப்படி ஏற்றுக் கொள்கிறதோ, அதே போல தான் தோல்வி வரும்போது துக்கம் வரும்போது கஷ்டம் வரும்போது, அதையும் மனது ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கஷ்டம் வந்தால் தான் இன்பத்தில் இருக்கும் சுகம் என்ன என்பது நமக்குத் தெரியும். அதை நீங்கள் இன்று புரிந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த போட்டி நிறைந்த நாளாக இருக்கும். மேலிடத்தில் வாக்குவாதம் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் மேலதிகாரிகளோடு கொஞ்சம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். வார்த்தையில் கவனம் இருக்கட்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வியாபாரத்திலும் நிதானம் தேவை. வீட்டில் சொந்த பந்தங்களிடம் பேசும் போதும் கவனமாக இருக்கவும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரம் செய்யக்கூடிய வேலைகளை மேற்கொள்ளலாம். நீங்கள் நினைத்த வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது நிம்மதியை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கப் போறீங்க. வாக்கு கொடுத்து தவறிய இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றி இருப்பீர்கள். என்னாலும் முடியும் என்பதை நிரூபிக்க கூடிய நாள் இது. உங்களுடைய தாழ்வு மனப்பான்மை நீங்க கூடிய நாளாகவும் இருக்கும். நிறைய மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் பயம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற பதட்டங்கள் இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. உற்சாகத்திலும் குறைபாடு ஏற்படும். கவலைப்படாதீங்க, உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். மனதில் இருக்கும் கவலைகளை மனதிற்கு பிடித்தவர்களிடம் ஷேர் செய்யுங்கள். நல்லது நடக்கும். அதற்காக பிரச்சனைகளை ஊரெல்லாம் சொல்லக்கூடாது ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் இந்த ஒரு விஷயம் கிடைத்தால் போதும் என்னுடைய வியாபாரத்தை நான் விரிவுபடுத்துவேன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஒரு நல்ல விஷயம் நடக்கும். இன்று கொஞ்சம் கூடுதலாக முயற்சி செய்யுங்கள். வங்கியில் லோன் எடுப்பது வாடகைக்கு இடம் பார்ப்பது அல்லது புதுசாக வண்டி வாகனம் வாங்குவது இதுபோல வியாபாரத்திற்கு என்ன தேவையாக இருந்தாலும் அதை இன்று முயற்சிக்கலாம். நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகளும் ஏற்படும். வேலையில் கொஞ்சம் கூடுதல் டென்ஷன் இருக்கும். தலை மேல் நிறைய வேலையை சுமக்க கூடிய சந்தர்ப்பங்களும் வரும். அன்றாடம் செய்யக் கூடிய வேலையை விட அன்றாடம், போடக் கூடிய உழைப்பை விட கூடுதலாக இன்று உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து தோல்வி அடைந்த காரியங்களை இன்று முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கையை வந்து சேரும். முதலீடு செய்வதாக இருந்தால் செய்யலாம் வங்கியில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். தங்க நகை வாங்கி வைக்கலாம். நிலத்தில் பணத்தை போடலாம். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கடவுள் சில பல டெஸ்டிகளை வைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நல்லவர்களா என்று சோதித்துப் பார்க்கக் கூடிய தருணம் வரும். சோதனை காலம் வரும். இன்று அந்த சோதனையை நீங்கள் கடக்க வேண்டிய சூழ்நிலை வரும். எவ்வளவு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், கெட்ட விஷயத்திற்கு துணை போகாதீர்கள். கோடி ரூபாய் கிடைத்தாலும் குறுக்கு வழி வேண்டாம். ஒரு ரூபாய் கிடைத்தாலும் நேர்வழியில் பயணம் செய்யுங்கள். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்வு தான். நீண்ட நாள் பண பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். மனைவிக்கு பிள்ளைகளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்யப் போகிறீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது. சந்தோஷம் அதிகமாகும் போது தான் தவறுகளும் அதிகமாகும். மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டால் இன்று அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top