இன்றைய ராசிபலன் – 02 பிப்ரவரி 2025

இன்றைய ராசிபலன் – 02 பிப்ரவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியம் எல்லாம் சுறுசுறுப்பாக வெற்றியாக முடியும். மனது சந்தோஷத்தில் இருக்கும். வேலை தொழில் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் ஏற்படக்கூடிய மறதிகள் நஷ்டத்தை உண்டு பண்ணலாம். ஆகவே வேலைகளை பட்டியல் போட்டுக் கொண்டு வரிசையாக செய்யவும். உங்கள் உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லாம், உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் உபசரணை எல்லாம் ஜாம் ஜாம் என்று நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இன்றைக்கான நேரம் செல்வதே தெரியாது. சந்தோஷத்திற்கு குறைவில்லை. இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளோடு உரையாடுவதன் மூலம் மன நிம்மதியை பெறுவீர்கள். பிரச்சனை இன்னது என்று தெரியாமல், நீங்களே கற்பனையில் சிந்தித்து கவலைப்பட்டுக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எல்லாம் நன்மைதான் நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புது நண்பர்கள் சந்திப்பும் நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்கும். வேலையில் பெருசாக டென்ஷன் இருக்காது. மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். டார்கெட்டை முடிப்பீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் நன்மையே நடக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகள் கூட நண்பர்களாக மாறக்கூடிய நாளாக அமையும். உங்களை திட்டிக் கொண்டே இருப்பவர்கள் கூட தானாக வந்து பாராட்டி விட்டு செல்வார்கள். இனம் புரியாத சந்தோஷம் மனதில் இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். அலைச்சலால் உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும். பார்ட்னரின் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்த ஆதரவுகள் கிடைக்கும். வீட்டில் முதியவர்களது நலனில் அக்கறை காட்டவும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு வேலையாகும். விருந்தாளிகளின் வருகை வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலை என்று கொஞ்சம் உடல் அசதியும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றபடி இந்த நாள் இனிய நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கும். உற்சாகம் பிறக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை பொது பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நீண்ட நாள் நடக்காத நல்ல காரியம் இன்று நடக்கும். முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை பார்ட்னரை நம்பி மட்டும் ஒப்படைக்க கூடாது. கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் இரட்டிப்பாகும். எதிர்பாராத செலவு சில பல டென்ஷன்களை கொண்டு வந்து சேர்த்து விடும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். நிதி நிலைமையை பொருத்தவரை இன்று உஷாராக இருந்தால் மட்டும்தான் எதிர்காலத்தில் பிரச்சனை வராது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். உங்களுடைய வேலைகளை செய்ய விடாமல் சில பேர் தடுப்பார்கள். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கு நடக்கும் நல்லதை வெளி ஆட்களிடம் பகிராதீர்கள். கண் திருஷ்டி விழும் வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல நேரம் பிறக்கும் எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு உயரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top