
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க கூடிய நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் இந்த நாள் நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு நல்ல உறக்கம் என்று சந்தோஷமாக கழித்திடுவீர்கள். பெருசாக பிரச்சனை இல்லை. குடும்பத்தில் சந்தோஷமிரட்டிப்பாகும். சுப செலவுகளும் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வாரா கடன் வசூலாகும். கடன் பிரச்சனை தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகமும் இருக்கிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். இறைவனின் அருள் ஆசி, பெரியவர்களின் அருள் ஆசியால் இன்று இனிய நாளாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருந்தாலும் எல்லா வேலையும் சரியான நேரத்திற்கு முடித்தாலும், ஏதோ வகையில் சின்ன மன வருத்தம் இருக்கும். சிரமம் இருக்கும். அது என்ன என்று புரியாது. இன்றைக்கு உங்களுக்கு எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் சின்னதாக இறைவழிபாடு செய்யுங்கள். மனக்கவலை நீங்கும். செய்த வேலைக்கான மனதிருப்தி கிடைக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு, நட்பு, இப்படி ஏதோ ஒரு வகையில் மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். பழைய கதைகளை பேசுகிறீர்கள். மனதிற்கு இதமான நாள். சில பேருக்கு பழைய காதலியை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். எதோ ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல உற்சாகம் இருக்கும். வாழ்க்கையில் எதையாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி பிறக்கும் நாளாக இந்த நாள் அமையும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இன்று குழப்பம் இல்லாத நாளாக இருக்கும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர்க்கமாக முடிவை எடுப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுடைய வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைக்கக்கூடிய பாக்கியம் இன்று உங்களுக்கு கிடைக்கும். சிறப்பான நாளாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உயர் பதவிகள் சில பேருக்கு கிடைக்கும். சில பேருக்கு இடம் மாற்றத்தோடு பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அது உங்கள் நன்மைக்காக இறைவன் கொடுக்கும் பரிசு ஏற்றுக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். தெரிந்தவர்கள் மூலமாக உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும். அந்த நல்லது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நல்லபடியாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று எதைத் தொட்டாலும் அது பல மடங்கு லாபத்தை கொடுக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். சேமிப்பை உயர்த்தலாம். நல்ல காரியங்களை துவங்கலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். குழந்தைக்கு மனைவிக்கு, பிடித்தபடி நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டு. வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த விடுமுறை நாள் மறக்க முடியாத நல்ல நாளாக அமையும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam