– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த விஷயங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எதிரிகள் பிரச்சனைகள் விலகும். நிதிநிலைமை சீராகும். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் இருக்கட்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். புதுசாக வாய்ப்புகளும் உங்கள் வீடு தேடி வரும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டலாம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சுகமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல ஓய்வும் இருக்கும். அன்றாட வேலைகளை சரியான நேரத்திற்கு நடத்தி முடிப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். பிள்ளைகளுடைய போக்கில் ஒரு கண் இருக்கட்டும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். தேவையில்லாத விஷயங்களை சிந்தித்து நேரத்தை வீணடிப்பீர்கள். இதனால் இந்த நாள் இறுதியில் மொத்த வேலையும் தலை மேல் விழும். கொஞ்சம் டென்ஷன் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை காலையிலிருந்தே முக்கியமான வேலைகளை செய்து முடிப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பொறுமையாக இருங்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மன குழப்பம் இருக்கும். புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேலையில் புதுசாக சேருபவர்களை முழுசாக நம்பாதீர்கள். பழைய நண்பர்களை கைவிடாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான அமைதியான நாளாக இருக்கும். யாரும் உங்களுடைய வாழ்க்கையில் குறிப்பிட மாட்டார்கள். எதிரியாக இருந்தவர்கள் கூட உங்களை விட்டு விலகி இருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை நம்பக் கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நேர்மையாக பேசுவீர்கள். பொய் சொல்லாமல் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த இடத்திலிருந்து பணம் கையை வந்து சேரும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். வருமானம் வந்தாலும் அகல கால் வைக்கக் கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான உணவை சாப்பிடவும். வீட்டு சாப்பாடு சாப்பிட வேண்டும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam