இன்றைய ராசிபலன் – 05 டிசம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 05 டிசம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் முழு திருப்தியோடு செய்வீர்கள். ஒரு ஈடுபாட்டோடு செய்வீர்கள். இதனால் நிறைய நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன்ன பயம் இருக்கும். பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் கொஞ்சம் கோழைத்தனமாக நடந்து கொள்வீர்கள். பரவாயில்லை, எல்லாம் ஒரு அனுபவம் தான் இருந்தாலும், அன்றாட வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. அனுமனை மனதிற்குள் நினைத்துக் கொண்டே இன்றைய முயற்சிகளில் ஈடுபடவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய தொழில் துவங்கலாம். புது வேலைக்காக முயற்சி செய்யலாம். புதுசாக பொன் பொருள் வீட்டிற்காக வாங்கலாம். நல்லபடியாக லாபகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களை அனாவசியமாக வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று லேசாக ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. யாராவது இனிக்க இனிக்க பேசினால் அவர்களை நம்பாதீர்கள். அளவு கடந்த பாசத்தை உங்கள் மீது யாரேனும் கொட்டினாலும், அதை நம்பாதீர்கள். மனதை பலகீனமாக வைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் பலத்தோடு இருந்தால் தான் இன்றைய நாளை ஜெயிக்க முடியும். செண்டிமெண்டாக யாராவது பேசி, உங்களை கவிழ்க்க நினைத்தால், உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு இருக்கும். பெருசாக வேலை பளு இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்திற்கு நடந்து முடியும். நல்ல சாப்பாடு இருக்கும். சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் முயற்சிகள் இன்று வெற்றியை கொடுக்கும். மனசு நிறைவாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை கொஞ்சம், சுப செலவுகளை ஏற்படுத்தும். வேலையில் இருந்து வந்த தடைகள் பிரச்சனைகள் விலகும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட, நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் மழையால் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நஷ்டங்கள் எல்லாம் லாபகரமாக மாறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை இருக்கும். எதையோ சிந்தித்துக்கொண்டே இருந்து, அன்றாடம் செய்யக் கூடிய வேலையை கோட்டை விட்டுவிடுவீர்கள். உங்களிடம் அனாவசியமாக யாராவது வந்து பேசி நேரத்தை வீணடிக்க முயல்வார்கள். அவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும் தேவையற்ற நட்புக் கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கையை மீறி செல்லும். சேமிப்பு கரையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க கூடாது. சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றி அனாவசியமாக விமர்சனம் பேசாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. வாழ்க்கையில் ஒரு நிம்மதி இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. நிதிநிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கொடுத்த பணத்தை மீண்டும் வசூல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். மனதிருப்தி அடைவீர்கள். சொத்து சுகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சாதனை படைப்பீர்கள். நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது நடக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். டார்கெட்டை முடிப்பீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வருமானம் பெறுக உண்டான வழிகளை கடவுள் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். எதிலும் கட்டுப்பாடு தேவை. மனதை அலைபாய விடக்கூடாது. பாத்துக்கோங்க அவ்வளவுதான்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top