இன்றைய ராசிபலன் – 05 பிப்ரவரி 2025

இன்றைய ராசிபலன் – 05 பிப்ரவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மிக மிக அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன் கோபப்படக்கூடாது. யாரையும் தாழ்த்தி பேசக்கூடாது. ஜாக்கிரதியாக இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். வம்பு வழக்குகள் தகராறில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய திறமைகளை நீங்களே வளர்த்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை நன்மைகளும் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கிறது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைத்து விடுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உறவுகளோடு ஒன்றாக இருக்கக்கூடிய நேரம் காலம் கூடி வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்திலும் வேலையிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அளவோடு சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பிரபல ஸ்தலங்களுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்வீர்கள். நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் தேவையற்ற டென்ஷன்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளிடம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை மௌன விரதம் இருக்க பாருங்கள். அனாவசியமாக பேசாதீர்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் எதிரிகளின் மூலம் வர வாய்ப்புகள் இருக்கிறது. அக்கம் பக்கம் இருப்பவர்கள் உறவுகள் எல்லாம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசாதீர்கள். இன்று சில பொய்களும் ஒளிவு மறைவுகளும் தான் உங்களை காப்பாற்றும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல உபச்சாரம் கிடைக்கும். செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கும். தேவையற்ற டென்ஷன் தானாக குறையும். வருமானம் உயரும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷம் இருக்கும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. உற்சாகத்தோடு வேலைகளை செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. சொத்து சுகம் சேர்க்கை வியாபாரத்தில் லாபம் என்று நிறைய நன்மைகள் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது. புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலையிலும் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவோடு சந்தோஷமாக உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இறையருள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். சில முடிவுகளை எடுக்க முடியாத தடுமாற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆலோசனை, அனுபவசாலிகளின் யோசனையை கேட்டு இன்றைய தினத்தை நகர்த்திச் செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள், அவசரப்படாதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற ஏமாற்றம் இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் செய்ய முடியாத சூழ்நிலை அமையும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் முழுசாக நம்பாதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top