– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்புகள் கரையும். குடும்பத்தோடு ஷாப்பிங் போக வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சங்கடங்கள் வரும். மேலதிகாரிகளுடன் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனை தந்து கொண்டிருந்த விஷயங்கள் இன்று தானாக உங்களை விட்டு விலகும். மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வாங்க நேரமும் காலமும் கைக்கோடி வரும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வேலையில் பின்னடைவு உண்டாகும். இன்றைய 24 மணி நேரம் சில பேருக்கு போதாது. வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். டென்ஷன் அதிகரிக்கும். இன்றைய நாளை ஒரு மணி நேரம் முன்பாகவே துவங்குங்கள். டென்ஷன் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மையான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை நீங்கள் சரியாக கவனித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களிடம் உதவி என்று கேட்க மாட்டீர்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் அனுசரித்து செல்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் உங்களை உயர்ந்த இடத்தில் நிற்க வைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தாமதம் ஏற்படும். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அது சுலபமாக முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். உடல் சோர்வு ஏற்படும். டென்ஷன் ஏற்படும். சில பிரச்சனைகளை எதிர்கொண்டு தான், வெற்றி காண வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை இன்று கற்றுக் கொள்வீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் குறைபாடு இருக்கும். உடல் உபாதைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். வேலையில் சுறுசுறுப்பு குறைவாக காணப்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு வேலை இருக்கும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். வியாபாரத்தில் முதலீடு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையில் பம்பரமாக சுழல்வீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வருமானம் இரட்டிப்பாகவும் வாய்ப்புகள் உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பணப்பிரச்சனை தீரும். வாங்கிய கடனை திருப்பி கொடுக்கக்கூடிய அளவுக்கு நிதி நிலைமை சீராகிவிடும். மன நிறைவை அடைவீர்கள். பிள்ளைகள், பெற்றோர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும். கூடா நட்பு பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தேவையில்லாத நண்பர்கள் தானாக உங்களை விட்டு விலகிவிடுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஈடுபடுவீர்கள் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும் புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் சுப செலவுகள் ஏற்படும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam