இன்றைய ராசிபலன் – 07 டிசம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 07 டிசம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தேவையில்லாத டென்ஷன் தானாக விளக்கும். விருந்தாளிகளின் வருகை கொஞ்சம் சுப செலவை ஏற்படுத்தும். இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முக்கியமான வேலைகளை முடித்து விடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும், பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே செல்ல வேண்டும். இல்லை என்றால் குறிப்பிட்ட வாகனங்களை தவறவிடவும் வாய்ப்புகள் உள்ளது. பிறகு டென்ஷன் தான் அதிகமாகும். பார்த்துக்கோங்க.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல ஓய்வு கிடைக்கும். வீட்டில் மரியாதையும் கூடும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தானாக விலகி நிற்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். வேலையும் தொழிலும் நினைத்தது போல நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நிலுவையில் இருந்த தொகை வசூல் ஆகும். சேமிப்பு அதிகரிக்கும். மன நிம்மதி பிறக்கும். வேலையில் பிரச்சனைகள் தானாக சரியாகிவிடும். உற்சாகத்தோடு நடந்து கொள்வீர்கள். சொத்து சுகம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. பிள்ளைகளின் முன்பு சண்டை போடக்கூடாது ஜாக்கிரதை.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். சுதந்திரம் பறி போனது போல தோன்றும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். தேவையில்லாத நட்பில் தேவையற்ற பேச்சுகள் மனதை கலைக்கும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கு வழியில் சிந்திக்க கூடாது. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். பிரச்சனை வந்தாலும் பொய் சொல்லாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக தொழில் துவங்குவது, புது வேலை தேடுவது, புதுசாக வீடு பார்ப்பது இதுபோல, முயற்சிகளை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுங்கள். ஏதாவது சுப காரிய நிகழ்ச்சிகள் என்றால் அவர்களுடைய பேச்சுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இன்று யாரையும் உதாசீனப்படுத்தக் கூடாது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் எதிர்ப்பு இருக்கும். வீட்டில் எந்த விஷயத்தையும் சொல்லி அனுமதி கேட்காதீர்கள். கட்டாயமாக எதிர்ப்பு தான் வரும். நல்ல விஷயமாகவே இருந்தாலும் ஒரு நாள் தள்ளி சொல்லவும். வேலை தொழில் எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தவும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று கொஞ்சம் ஒளிவு மறைவோடு பேசினால் தான், உங்களுடைய வேலை ஓடும். ரொம்பவும் நேர்மையாக பொய் சொல்ல மாட்டேன் என்று இருந்தால், சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். தோல்வி அடைந்த விஷயங்களில் இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம். கூடா நட்பு தானாக விளக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வாகனங்களில் செல்லும் போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய முதலீடுகளுக்கு உண்டான கடன் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெரியவர்களது பாராட்டை பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முழுசாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. வீட்டிலும் சின்ன சின்ன தகராறுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. அனுசரித்து செல்லுங்கள். மனைவியாக இருந்தாலும் மேலதிகாரிகளாக இருந்தாலும் இன்று பணிவு மட்டும் தான் உங்களை காப்பாற்றும். தலைக்கனம் கூடவே கூடாது. நீ பெரியவனா நான் பெரியவனா ஈகோ பார்க்க கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பை முதலீடாக போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அடம் பிடித்து முடிவு எடுக்கக் கூடாது. காசை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை அனாவசியமாக வீணடிக்காதீர்கள். எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை வரும். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். வேலையில் அக்கறை காட்டுங்கள். பொய் சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள்

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top