நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 08 ஏப்ரல் 2026
 nithyasubam.in

இன்றைய ராசிபலன் – 08 ஏப்ரல் 2026 nithyasubam.in


– விளம்பரம் –

மேஷம்

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு தனம், தானியம், லட்சுமி கடாட்சம் ஆகியவை பெருகும் உன்னத நாளாக அமையும். நீண்டகாலமாக தடைபட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் துளிர்விடும். வசூலாகாத கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்ததை விட அதிக தனவரவு உண்டாகும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிட்டும். இனிமையான பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சேமிப்புகள் உயர்ந்து மன நிறைவைத் தரும்.

– விளம்பரம் –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த சுகமான நாளாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பீர்கள். போதுமான ஓய்வு கிடைப்பதுடன், குடும்பத்தாருடன் இணக்கமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மிகுந்த உற்சாகத்துடன் இந்த நாளை நிறைவு செய்வீர்கள்.

கடகம்

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தமது கடமைகளிலிருந்து தவறாது நடந்து கொள்வீர்கள். சோம்பல் குணம் நீங்கி, தெளிவுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை சீராகி, தேவையான அளவு தனம் கையில் புரளும். உடல் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் சரியாகும்.

– விளம்பரம் –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதியும், சோர்வும் மேலோங்கும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் மந்தமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தி, முன்கோபம், அவசரம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இறைவழிபாடு மேற்கொள்வது மன அமைதியைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாளாகும். எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் பெரும் நன்மைகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய சிறு பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும். எதிர்பாராத தனவரவுக்கும் வாய்ப்புள்ளது.

– விளம்பரம் –

துலாம்

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து உயரக்கூடிய நாளாக அமையும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். கலைஞர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இது அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி, மேன்மை அடைவார்கள். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக முடிந்து நற்பலன்களைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய நண்பர்களின் அறிமுகம் மனமகிழ்ச்சியைத் தரும். காதல் கைகூடி, திருமண பந்தம் வரை செல்ல வாய்ப்புள்ளது. உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நிலவிய சிக்கல்கள் நீங்கும். உறவுகளுடன் இணக்கமாக நேரத்தை செலவிடுவீர்கள். சுப விரயங்கள் ஏற்படும். எனினும், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதும், கடமையிலிருந்து தவறாமல் இருப்பதும் அவசியம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி, பொறாமை சார்ந்த பிரச்சனைகள் உருவாகக்கூடிய நாளாகும். பகைவர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். ஒரு பணியை முழுமையாக முடிப்பதில் தடைகள் ஏற்பட்டு, மனத்தளர்ச்சியை ஏற்படுத்தலாம். எனவே, கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது அவசியமாகும்.

மகரம்

இன்று மகர ராசிக்காரர்கள் நிதானத்துடன் செயல்படுவது சாலச்சிறந்தது. சிறு சிறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். எடுத்த உடனேயே வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து, பலமுறை முயற்சி செய்த பின்னரே நிச்சயம் வெற்றி கிட்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும் நாளாகும். கடன் சுமை குறையும். வாராக்கடன்கள் வசூலாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எனினும், கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக் கொடுத்து நடந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவார்கள். தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும். நிதி நிலைமை சீராகி மன நிம்மதி தரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இன்று அமையும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top
I am Online
I am Online