நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 08 ஏப்ரல் 2026
 nithyasubam.in

இன்றைய ராசிபலன் – 08 ஏப்ரல் 2026 nithyasubam.in


– விளம்பரம் –

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று செல்வச் செழிப்பும், சுப காரிய யோகமும் ஒருங்கே அமையப்பெற்ற தினமாக அமையும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த மங்கள நிகழ்வுகள் மீண்டும் வேகமெடுக்கும். நிகழாதெனக் கருதிய கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உண்டு. தேவைகளுக்கு மேலாகவே தனவரவு உண்டாகி, கையில் பணம் நிலைக்கும். இனிய அனுபவங்கள் நிறைந்த நாளாக இது அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத, சிறப்பான முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்படும். அநாவசியமான சிக்கல்கள் அகன்று மன அமைதி நிலவும். சத்ரு தொல்லையிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். மன நிம்மதி உண்டாகும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி உடல்நலம் சீரடையும். சேமிப்பு அதிகரிக்கும்.

– விளம்பரம் –

மிதுனம்

இன்று மிதுன ராசி அன்பர்களுக்கு ஆனந்தம் பொங்கும் சுபதினமாக அமையும். நிறுத்தப்பட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவு செய்வீர்கள். போதுமான ஓய்வு கிடைக்கும். மிகுந்த நேரத்தைச் சேமிக்கலாம். குடும்பத்தாருடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து மகிழ்வீர்கள். புத்துணர்ச்சியுடன் தினத்தை நிறைவு செய்வீர்கள்.

கடகம்

இன்றைய நாள் கடக ராசி அன்பர்களுக்கு நற்பலன்கள் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தங்களின் கடமைகளில் இருந்து விலகாமல், பொறுப்புடன் செயல்படுவீர்கள். சோம்பல் அகன்று உற்சாகம் பெருகும். நிதி நிலைமை சீராகும். தேவையான தனவரவு கைகொடுக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் நிவர்த்தியாகும்.

– விளம்பரம் –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல் அசதியும், சோர்வும் உண்டாகும். தொழில் மற்றும் பணிகளில் மந்தமான சூழல் நிலவும். வியாபாரம் சற்று சுணக்கத்தைக் காணும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி, நிதானத்துடன் செயல்படவும். முன்கோபத்தையும் அவசர முடிவுகளையும் தவிர்க்கவும். இறைவழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நன்னாளாக அமையும். எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மகத்தான நற்பலன்களைக் காண்பீர்கள். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். குடும்பச் சிக்கல்கள் தீர்ந்து நல்லிணக்கம் மேலோங்கும். எதிர்பாராத தனவரவுக்கு வாய்ப்புள்ளது.

– விளம்பரம் –

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பெயரும் புகழும் அந்தஸ்தும் உயரக்கூடிய யோக தினமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் தென்படும். கலைத்துறையினருக்கு இன்று உற்சாகம் பொங்கும் நாளாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் நிலவிய தடைகள் அகலும். நீண்டதூரப் பயணங்கள் இனிதாகவும், சுபமாகவும் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்குப் புதிய நண்பர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியைத் தரும். காதல் கைகூடி, அது திருமண பந்தம் வரை செல்ல வாய்ப்புண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவிய சிக்கல்கள் தீரும். உறவினர்களுடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கடமைகளில் இருந்து தவறாமல் செயல்படுவது அவசியம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி பொறாமை சார்ந்த சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எதிர்ப்புகள் அகலும். எடுத்த காரியங்களில் முழுமையான வெற்றி காண்பதில் தடை ஏற்படலாம். தடைகள் தோன்றி மனச்சோர்வை ஏற்படுத்தலாம். எனவே, கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது சாலச் சிறந்தது.

மகரம்

மகர ராசி அன்பர்கள் இன்று மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும். சிறுசிறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகலாம். எந்தவொரு செயலிலும் உடனடி வெற்றியை எதிர்பார்ப்பது கூடாது. விடாமுயற்சிக்குப் பின்னரே வெற்றி கைகூடும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தன வரவு பெருகும் யோக தினமாக அமையும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நிகழாதெனக் கருதப்பட்ட கடன்கள் வசூலாகும். சொத்து சார்ந்த பிரச்சனைகள் தங்களுக்குச் சாதகமாக முடியும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எனினும், கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விட்டுகொடுத்துச் செயல்படுவது குடும்பத்தில் நல்லிணக்கத்தைக் காக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்கள் இன்று வெற்றி வாகை சூடும் உன்னத தினமாக அமையும். திறம்படச் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி உடல்நலம் மேம்படும். நிதி நிலைமை சீரடையும். இறை நம்பிக்கை மேலோங்கி, மன அமைதி உண்டாகும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top
I am Online
I am Online