
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற சங்கடங்கள் சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எல்லா இடங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனைகள் இல்லை. வம்பு வழக்குகள் தேடி வந்தாலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் ஒரு கவனத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்கள் செய்யும் தவறையும் சுட்டிக் காட்டுவீர்கள். இதனால் நேரடியாக சில பேருக்கு உங்களை பிடிக்காது. இருந்தாலும் அவர்களுக்கும் நீங்க தீங்கு விளைவிக்க மாட்டீர்கள். மனநிறைவோடு சில வேலைகளை செய்து நிம்மதி பெறுவீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். யாரை நம்பியும் கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. கைமாத்தாக பணம் கொடுக்கக் கூடாது. நஷ்டம் ஏற்பட ஏமாற வாய்ப்புகள் இருக்கிறது.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களை வேண்டாம் என்று தூக்கிப் போட்டவர்கள் எல்லாம், உங்களை தேடி வருவார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வார்கள். தீர்வையும் வாங்கிக் கொள்வார்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள். நல்லது நடக்கும் நாள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் தடைப்பட்டு வந்த விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். புதிய முயற்சிகள் வெற்றியை அடையும். புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான முயற்சிகள் வெற்றி அடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சாதனை படைப்பீர்கள். நடக்க முடியாத விஷயங்களை நடத்திக் காட்டுவீர்கள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் கைகூடி வரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புது வீடு வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்திற்கு எந்த குறைவும் இருக்காது. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர்கள் உறவுகள் என்று நேரத்தை கழிப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டதை புரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை அமையும். இதுநாள் வரை புரியாமல் தவறான இடத்தில் சிக்கி தவித்தவர்களுக்கு விடுதலை கிடைக்கும். நீண்ட நாள் துயரங்கள் நீங்கும். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இன்று நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் எல்லாம் லாபமாக மாறும். உத்தியோகத்தில் உயர்வு காணப்படும். திட்டிக் கொண்டிருந்த மேலதிகாரிகளது வாயால் பாராட்டை பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று அமைதியாக உங்களுடைய நாளை நகர்த்திச் செல்வீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. கஷ்டம் வந்தாலும் அதே முகம் தான். சந்தோஷம் வந்தாலும் அதை முகம் தான். எந்த பாரபட்சமும் இருக்காது. ஒரு துறவியைப் போல உங்களுடைய வாழ்க்கை நிலை இன்று இருக்கும். எதையோ சாதித்தது போல இந்த நாள் நகர்ந்து செல்லும். கவலைப்படாதீங்க. கஷ்டமில்லை நல்லதே நடக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பக்குவம் அடையும் நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிக்கல் பிடுங்கள் தானாக விலகும். கடன் சுமை குறையும். வட்டி கட்டி கொண்டிருந்த இடத்தில் மொத்த அசலையும் திருப்பி அடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப பொறுப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கையில் இருக்கும் பணத்தை எல்லாம் தேவையான விஷயத்திற்கு செலவு செய்து, கடமைகளை சரிவர செய்து முடித்து, இந்த மாதத்திற்கான பட்ஜெட்டை போடுவீங்க. கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருப்பீர்கள். அதில் எந்த குறையும் வராது. இருந்தாலும் வேலையில் டென்ஷன் இருக்கும். ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam