மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரச் செழிப்பு மேலோங்கும். நெடுநாள் கடன் சுமையிலிருந்து விமோசனம் பெறுவீர்கள். திடீர் தனவரவுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உங்களுக்குச் சேர வேண்டிய தனம், உறுதியாக உங்கள் கையை வந்தடையும். வசூலாகாத கடன்களை வசூலிக்க முயற்சி செய்யலாம். உடல்நலக் குறைபாடுகள் அகன்று ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். தொழிலிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நெடுநாள் சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உடல்நலச் சிரமங்கள் விலகி ஆரோக்கியம் சீராகும். வீண் விரயச் செலவுகள் கட்டுக்குள் வரும். சுபச் செலவுகள் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று மன நிறைவு பெருகும். தொழிலிலும் வியாபாரத்திலும் அமைதியான சூழல் நிலவும். பணச் சிக்கல்கள் தீரும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் மேலோங்கும். குடும்பத்தில் ஆனந்தம் இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சற்று நிதானம் தேவை. தேவையான அளவு ஓய்வினை மேற்கொள்ளுங்கள். அயராது உழைப்பதைத் தவிர்க்கவும். வேலைச் சுமைகளைத் தாங்களாகவே தேடிக்கொள்ள வேண்டாம். காலத்தை வீணடிக்காதீர்கள். யோசித்துச் செயல்படுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களைப் பொருத்தவரை இன்று சற்று உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மை சூழல் உருவாகலாம். உடல் உபாதைகள் தலைதூக்கலாம். சோர்வின் காரணமாக உங்கள் பணிகள் தடைபடலாம். மிகுந்த கவனம் தேவை. ஆரோக்கியத்தில் விசேஷ கவனம் செலுத்துங்கள். சரியான வேளையில் உணவருந்துங்கள். தேவையான அளவு நீர் அருந்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று யோகம் நிறைந்த நாளாக அமையும். எதிர்பாராத தனவரவு மனமகிழ்ச்சியைத் தரும். தொழிலிலும் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த யோகமான தினத்தை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், அந்தஸ்து உயரும். நீங்கள் கேளாமலேயே பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்பு புதுமையான அனுபவங்களைத் தரும். காதல் கைகூடி, அது திருமண பந்தம் வரை செல்ல வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல நிகழ்வுகள் இன்று உங்கள் வாழ்வில் அரங்கேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாகப் பல நன்மைகள் உண்டாகும். தேவையான நேரத்தில் தக்க உதவிகள் கிடைக்கும். சிக்கல்கள் சுலபமாகத் தீரும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விமோசனம் பெறுவீர்கள். கடன் சுமை நீங்கி, நன்மைகள் பெருகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரையில் இன்று போட்டி பொறாமைகள் சற்று தலைகாட்டலாம். எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலிலும் வியாபாரத்திலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சில் கவனம் தேவை. புதிய நபர்களை முழுமையாக நம்புவதைத் தவிர்க்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களைப் பொறுத்தவரை வருமானம் உயரும். தேவையான தனம் கையிருப்பில் இருக்கும். அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கூடும். உறவினர்களுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று நற்செய்திகள் வந்து சேரும். நண்பர்களுடன் இனிமையான நேரத்தைச் செலவிடுவீர்கள். தேவையான பணப்புழக்கம் கையில் இருக்கும். நீண்ட தூரப் பயணங்கள் இனிதே அமையும். வியாபாரத்தை விரிவாக்கலாம். வெளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த நாடு திரும்பும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
மீனம்
மீன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தேவையான தனம் கையிருப்பில் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும். நெடுநாள் கனவுகள் ஈடேறும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


