மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று இலாபகரமான நாள். வர்த்தக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் கூடும். புதிய வேலைவாய்ப்புகளை நாடிச் செல்வோருக்குச் சாதகமான சூழல் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். முன்னேற்றம் நிறைந்த இந்த நன்னாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முழுமையான வெற்றியை ஈட்டித் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த நாளாக அமையும். மிகுந்த செயலூக்கத்துடன் திகழ்வீர்கள். பிறருக்கு உதவிக் கரம் நீட்டுவதில் மனம் நாட்டம் கொள்ளும். புதிய வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு, அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று நலமும் சுகமும் பெருகும் நன்னாள். பணியிலும் வர்த்தகத்திலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். சோம்பல் அகன்று, நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் நற்பெயர் கிட்டும். இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்று சிறப்பான முன்னேற்றம் புலப்படும்.
கடகம்
கடக ராசியினரே, இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். செயல்திறன் கூடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிலும் வர்த்தகத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். தம்பதியர் ஒற்றுமை வலுக்கும். குடும்ப ஆனந்தம் இருமடங்காகும். சற்று சுப விரயங்கள் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று முன்னேற்றகரமான நாள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்றும் சாதுரியம் வெளிப்படும். உங்களது பேச்சாற்றல் துலங்கும். தந்திரமாகச் செயல்பட்டு சில காரியங்களை எளிதாகச் சாதிப்பீர்கள். பெரும் சிக்கல்களுக்கு சுலபமாக முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாள் இது.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று ஆர்வமும் சுறுசுறுப்பும் பெருகும். புதிய விஷயங்களை விரைந்து கற்றுக்கொள்வீர்கள். அநாவசியமான சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். வர்த்தகத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். சிறு வணிகர்களும் பெரிய இலாபத்தைப் பார்ப்பீர்கள். சௌகரியங்கள் உங்களைத் தேடி வரும். கலைஞர்களுக்கு ஏற்றம் கிட்டும் நன்னாள் இன்று.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று மன மகிழ்ச்சி பொங்கும். அன்பு வெளிப்படும். சுபச் செலவுகள் உண்டாகும். உள்ளம் கவர்ந்தவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி மன நிறைவு பெறுவீர்கள். மனதில் இருந்த பெரும் சுமை குறையும். தூரப் பயணங்கள் இனிதாகும். பணியிலும் வர்த்தகத்திலும் சிறு தடைகள் இருப்பினும், பெரும் பாதிப்புகள் ஏற்படாது. சிக்கல்களை சமாளிக்கும் பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இன்று சிறு சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். பணியில் முழு கவனம் செலுத்துங்கள். உங்களது பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதிய நபர்களை முழுமையாக நம்புதல் கூடாது. பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று சற்று எதிர்ப்புகள் உருவாகலாம். உங்களது கருத்துக்களுக்கு அங்கீகாரம் குறைவு. பணியிலும் வர்த்தகத்திலும் சக மனிதர்களைப் போராடி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் செயல்படுங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த நாள் இனிதாகும்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குவீர்கள். பலவிதமான கற்பனைகள் மனதை ஆக்கிரமிக்கும். சிந்தனைகளைக் குறைத்து, கற்பனைகளைத் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களால் இயன்ற முயற்சிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்குத் துணையாக நிற்பான். நிச்சயம் நன்மைகள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று ஊக்கமும் உற்சாகமும் பெருகும் நாள். மன நிம்மதி கிட்டும். பணியிலும் வர்த்தகத்திலும் நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். துயரங்கள் அகலும் நன்னாள் இது. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இன்று மன அமைதியும் ஆழ்ந்த உறக்கமும் உங்களை வந்தடையும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று ஓய்வும் அமைதியும் கிடைக்கும். பணியிலும் வர்த்தகத்திலும் நிலவி வந்த மன அழுத்தம் குறையும். இறைவன் உங்களுக்குத் துணை நிற்பான். தேவையான நிதியாதாரங்கள் கைகூடும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதியரிடையே இருந்த மனக் கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam


