
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் மேன்மையாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குறிப்பாக குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாமியார் மருமகள் உறவு பலப்படும். சந்தோஷம் பெருகும். கடன் சுமை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகள் தேடி வரும். வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடக்கும். உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு உண்டான அத்தனை வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லட்சியங்கள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகி விடும். வேலையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். கடன்சுமை குறையும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மன அழுத்தம் குறையும். மன பயம் குறையும். சந்தோஷமாக இந்த நாளை நகர்த்திச் செல்வீர்கள். இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை மனதிற்கு இன்பமான ஒரு சூழலை உண்டு பண்ணும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நாலு பக்கத்தில் இருந்தும் தேடி வரும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகளும் உண்டாகும். வியாபாரம் வேலை, என்று எல்லா விஷயத்திலும் நீங்கள் நினைத்ததை விட நல்ல விஷயங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவுதான் அனுசரித்துச் சென்றாலும் எதிரிகளை சமாளிக்க முடியாத சூழல் உண்டாகும். நேரம் வீணாகும். லேசாக மனக்கசப்பும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே இன்றைய நாளை ஜாக்கிரதையாக கடந்து செல்லுங்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வியாபாரம் வேலை என்று எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான ஓய்வு நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நல்ல சாப்பாடு இருக்கும். சந்தோஷம் இருக்கும். குழந்தைகளோடு நேரத்தை செலவு செய்வதற்கான கால நேரம் கூடி வரும். பிள்ளைகளுடைய மனதில் இருப்பதை நன்றாக புரிந்து கொள்வீர்கள். பெற்றவர்களுடைய கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. எதிரி தொல்லை விலகும். சேமிப்பு உயரும் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் நல்ல லாபத்தை பார்க்கலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உறவுகளுடன் பேசும்போது, வேலை செய்யும் இடத்தில் வியாபாரிகளோடு பேசும்போது எல்லாம் வார்த்தையில் ரொம்ப ரொம்ப கட்டுப்பாடு தேவை. முன்கோபத்தை குறைக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இன்று பிரச்சனைகள் சூழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளோடு ஜாக்கிரதியாக பழகுங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும். தேவையற்ற பஞ்சாயத்திற்கு சென்றால் உங்களுக்கு தான் பிரச்சனை பார்த்துக்கோங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam