இன்றைய ராசிபலன் – 10 பிப்ரவரி 2025

இன்றைய ராசிபலன் – 10 பிப்ரவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும்‌. பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான ஆதரவான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சரிவர செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறவுகள் என்று அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பொறுமையை பார்த்து பூமாதேவியே பொறாமைப்படும். அந்த அளவுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பக்குவமாக நகர்ந்து செல்லும். பலருக்கு நல்லது செய்யக்கூடிய நாளாகவும் அமையும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். அடுத்தவர்களோடு அனாவசியமாக வாக்குவாதம் செய்யக்கூடாது. எந்த விஷயத்தையும் நியாயப்படுத்தக் கூடாது. உங்கள் மனதிற்கு தவறு என்று பட்டால் அந்த காரியத்தில் நீங்கள் ஈடுபடாதீர்கள். அடுத்தவர்களை திருத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகும். உறவுகளோடு பேசும்போது மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப காரிய செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்தையும் கூடுதல் கவனம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்திலும் கவனம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வீடு தேடி வரும். நீங்கள் அமைதியாகவே இருந்தாலும் சில பல பிரச்சனைகளை இன்று எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேறு வழி கிடையாது. தவிர்க்க முடியாத காரணத்தால் மனக்கசப்பான சம்பவங்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சாக்கிரதியாக இருங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். வாழ்வில் பெரிய அளவில் வெற்றிகான இன்று பிள்ளையார் சுழி போடுவீர்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். ஜெயித்து காட்டுவீர்கள். போட்டிகளில் ஜெயிக்க கூடிய நாளாகவும் இன்றைய நாள் அமையும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. முதலீட்டில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மேலதிகாரிகளோடு பணிவோடு நடந்து கொள்ள வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். கூடா நட்பில் இருந்து விலகி இருங்கள். கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு செல்ல வேண்டாம். சில பஞ்சாயத்துகளுக்கு போக வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான சோதனை காலகட்டத்தை கொடுக்கப் போகின்றான். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். அரசாங்க வேலைகள் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். திருமண பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆசி இறைவனின் ஆசிர்வாதம் மூலம் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொழில் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்ல படியாக சென்றாலும், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உறவுகள் சண்டை போடும். வாக்குவாதம் செய்யும். அதையெல்லாம் சமாளிக்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சரிவான நாளாகத்தான் இருக்கும். எல்லாரிடமும் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை இருக்கும். கோபமே வந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாது. சூழ்நிலை காரணமாக சூழ்நிலை கைதியாக மாறுவீர்கள். கவலைப்படாதிங்க. விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப் போவது கிடையாது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top