இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் நடக்கும். உயர்ந்த நிலையை அடைவதற்கு அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை தொழில் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும். வாரத் துவக்கமே சந்தோஷமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அசதி இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. வாரத்தில் முதல் நாள் சோம்பேறித்தனத்தோடு இருக்கிறதே என்று நிறைய பேர் வருத்தப்படுவீர்கள். கவலைப்படாதீங்க, போகப் போக சரியாகிவிடும். இன்றைய நாள் அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவசியம் முடித்தே ஆக வேண்டும் என்ற வேலையில் மிச்சம் வைக்க வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று துவங்கும் காரியம் லாபகரமாக முடியும். புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் துவங்கலாம். சீட்டு கட்ட துவங்கலாம், எதிர்காலத்திற்கு சேமிப்பு செய்யலாம். நிச்சயம் நல்லது நடக்கும். வேலையில் இருந்து வந்த எதிரி தொல்லை நீங்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். நீங்களே உங்கள் கையில் இருக்கும் படத்தை சுப செலவுகளாக முதலீடு செய்து கொள்ளுங்கள். எந்த பிரச்சனையும் பெருசாக இருக்காது. மூன்றாவது நபர் பேச்சை கேட்டு எந்த முடிவும் இன்று எடுக்கக் கூடாது. உங்களை மூளை சலவை செய்து ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை இன்று நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். புது மனிதர்களோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் சுகமான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் அந்தந்த நேரத்திற்கு சரியாக முடித்துக் கொடுப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் சில பேருக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு வேலை மாற்றத்தோடு சேர்ந்த பதவி உயர்வு கிடைக்கும். சந்தோஷம் அளவில்லாமல் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்கவலை இருக்கும். தேவையில்லாத விஷயங்களை யோசித்து யோசித்து நீங்களே நேரத்தை செலவு செய்வீர்கள். சொன்ன நேரத்திற்கு சொன்ன வேலையை முடித்துக் கொடுக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். சில இடங்களில் திட்டு வாங்குவீர்கள். தலைகுனிவு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் அக்கறை காட்டினால் போதும் தேவையற்ற விஷயங்களை விட்டு தள்ளுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த நாள் நகர்ந்து செல்லும். பிரச்சனைகள் வந்தாலும் அதை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுடைய அனுபவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய திறமை அடுத்தவர்களுக்கு புரியும் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாகும். தொட்ட காரியத்தில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். வேலையிலும் தொழிலிலும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவியோ சண்டை வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நட்புறவு உண்டாக கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். கலைஞர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புது வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். அரசு ஊழியர்கள் தங்களுடைய வேலையில் அதிக கவனம் காட்ட வேண்டும். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. மூன்றாவது நபர் பிரச்சனைக்கு கட்டாயம் செல்லக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வேலையிலும் தொழிலிலும் நிதானம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். குடும்ப விஷயங்களை பேசி பேசி ஊதி ஊதி பெரிசாக்க கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். வேலையிலும் தொழிலிலும் அதிக கவனம் இருக்க வேண்டும். மூன்றாவது நபரை நம்பி உங்களுடைய வேலையை ஒப்படைக்க கூடாது. நண்பர் தானே என்று சொல்லி முழுசாக அவர்களை நம்ப வேண்டாம். எதிலும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கையில் கொஞ்சம் பணம் புரளும் மனதில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். உற்சாகமான இந்த நாளை தொடங்குவீர்கள் இறையருள் கிடைக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top