இன்றைய ராசிபலன் – 11 மார்ச் 2025

இன்றைய ராசிபலன் – 11 மார்ச் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத வரவு, எதிர்பாராத பொருள் சேர்க்கை சந்தோஷத்தை கொடுக்கும். பண வரவு இருக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிர்பாராத நண்பர்களின் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் தெரியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வராத பணம் கையை வந்து சேரும். தனம் தானியம் உயரக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி தரும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் சண்டையாக மாற வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. வீடு, குடும்பம், குழந்தைகள் மனைவி இந்த விஷயத்தில் எதையும் அலசி ஆராயாமல், விசாரிக்காமல் பிரச்சனையில் ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலையில் கொஞ்சம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சந்தோஷத்தில் வேலையையும் வியாபாரத்தையும் விட்டுவிடக்கூடாது. சொந்த விஷயத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவுக்கு வேலையையும் பார்க்க வேண்டும் கவனம் இருக்கட்டும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். கூடுதலான ஓய்வு தேவைப்படும். வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாது. உடல் உபாதைகளால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. சாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக வயதில் முதியவர்கள் அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகரிக்கும். கோபத்தால் நிறைய நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புது எதிரிகள் உருவாவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்த நிம்மதியை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கோபத்தை குறைக்க மனதிற்கு பிடித்த பாடலை கேட்கவும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று முன்பின் யோசிக்காமல் எந்த வேலையும் செய்யக்கூடாது. புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை நம்பி பணம் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ஜாக்கிரதை, ஏதாவது ஒரு விஷயத்தில் ஏமாந்து விட வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான வேலை செய்யும் போது ஏதாவது ஒரு தடை வரும். மறதி வரும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது. வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானம் தேவை. அகல கால் வைக்காதீங்க. சிந்திக்காமல் செயல்பட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உதவி கிடைக்க கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய, நண்பர்களும் உறவினர்களும் பக்க பலமாக இருப்பார்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு கை தூக்கி விட்டு உதவி செய்வார்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுடைய அறிவுரையின் பேரில் இன்று உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். குலதெய்வ வழிபாடு செய்வது, நேர்த்திக்கடன் செலுத்துவது போன்ற விஷயங்களை இன்று செய்யலாம். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். வீட்டில் மனைவியிடம் பொய் சொல்லாதீங்க. பிரச்சனையே வந்தாலும் உண்மையை சொல்லுவது நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தேவையற்ற குழப்பம் இன்று இருக்கும். ஏற்கனவே எடுத்த முடிவுகளை மறுபரிசீலனை செய்வீர்கள். புது முடிவை எடுக்க முடியாமல் குழம்பி இருப்பீர்கள். எது நல்லது என்பது உங்களுக்கு தெரியாது. பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். பொறுமையாக நின்று நிதானமாக யோசித்தால் இன்று பிரச்சனை வராது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரக்கூடிய நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பார்ட்னரோடு எந்த சண்டையும் போடக்கூடாது. கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் பிறக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top