இன்றைய ராசிபலன் – 12 மார்ச் 2025

இன்றைய ராசிபலன் – 12 மார்ச் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். இறைவழிபாட்டின் மூலம் நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் துயரங்கள் துன்பங்கள் விலகும். மனக்கஷ்டத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக மூச்சு விடுவீர்கள். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்தக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் நேரத்துக்கு சரியாக முடித்துவிட்டு, நிம்மதியாக மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க. ஆர்வம் இருந்தால் மட்டும் வியாபாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செய்யக்கூடிய வேலைகள் வெற்றியை கொடுக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை கிடைக்கும். புதுசாக வேலை தேடலாம். புது பொருட்களை வாங்கலாம். வீட்டை அழகு படுத்தலாம். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லக்கூடாது. உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை அடைவீர்கள். புதிய ஐடியாக்கள் வியாபாரத்தை விரிவு படுத்த துணையாக இருக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய சிந்தனைகள் எழும். நிறைய நல்ல விஷயங்களை அலுவலக வேலையில் அறிமுகப்படுத்துவீர்கள். வியாபாரமாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, அதில் உங்களுக்கு இன்று முன்னுரிமை கிடைக்கும். திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரலாம். நீண்ட நாள் பார்க்காத பிள்ளைகளை பார்க்கக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புகளும் வரும். மனது சந்தோஷம் அடையக்கூடிய நாள் இன்று.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். சுறுசுறுப்பு இருக்காது. வேலையில் பின்னடைவு உண்டாகும். இதனால் சில பல பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் முயற்சி தேவை. விடாமுயற்சி மட்டும் தான் இன்று உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மனது பொதுப்பணிகளில் ஈடுபடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். மனசாட்சிக்கு புறம்பாக எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டீர்கள். பொய் சொல்ல மாட்டீர்கள். இந்த நாள் ரொம்பவும் இனிமையான நாளாக செல்லும். நேர்மைக்கு உள்ள வலிமையை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கை நிறைய பணம் வரக்கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராக்கும். வியாபாரத்தில் என்றோ செய்த முதலீடு இன்று பெரிய லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். வீட்டில் சுபகாரிய செலவுக்கு, அந்த பணம் உபயோகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்காக  அயராது உழைப்பீர்கள். வியாபாரத்தை தூக்கி விட என்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் யோசிக்காமல் செய்து முடிப்பீர்கள். விவேகம் வெளிப்படும் நாளாக இந்த நாள் அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தொலைநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன பிரச்சனை வரும் என்பதை இன்றே சிந்திப்பது நல்லது. சில முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால், இன்று எடுத்து விடுங்கள். இன்று நீங்கள் தாமதிக்க கூடிய ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய நல்லது கைநழுவி செல்லும் ஜாக்கிரதை. பிரச்சினைகளுக்கு கட்டாயம் இன்று முடிவு கட்ட வேண்டிய நாள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேல் அதிகாரிகளை சுலபமாக உங்கள் கைக்குள் போட்டுக் கொள்வீர்கள். இத்தனை நாள் கற்றுக் கொள்ளாத வித்தையை, சில பல அனுபவங்கள் இன்று உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top