இன்றைய ராசிபலன் – 13 ஜூலை 2025

இன்றைய ராசிபலன் – 13 ஜூலை 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை வியாபாரத்தில் எல்லாம் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூடாது. பிடித்திருக்கும் பிடிக்கலையோ சில விஷயங்களை இன்று ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாமல் சிக்கல்கள் இல்லாமல் இந்த விடுமுறை நாள் சந்தோஷமாக செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர, சரியான நேரத்தில் முடித்துவிட்டு, உங்களுக்கான ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் ஒற்றுமை காணப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடமிருந்தும் இலவசமாக எந்த ஒரு உதவியும் பெற வேண்டாம். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள், அனுபவ பாடத்தை கற்றுக் கொடுக்கும். மனசோர்வு உண்டாகும். எதிர்கால வாழ்க்கையைக் கண்டு சில பேருக்கு பயமும் வரும். ஆனால் எதைப் பற்றியும் சிந்தித்து நேரத்தை வீணடிக்க கூடாது. நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. நல்ல தூக்கம் இருக்கும். நல்ல சாப்பாடு இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். இன்றைய நாள் இப்படியே சந்தோஷமாக செல்ல போகிறது என்ஜாய் பண்ணுங்க. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். போட்டிகள் பொறாமைகள் நிறைந்த உலகத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களை நீங்கள் பொதுப்பணிகளிலும் ஈடுபடுத்தியும் கொள்வீர்கள். நல்லது நடக்கும் நாள்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் தடுமாறும். தேவையற்ற செலவுகள் வரும். கையில் இருக்கும் சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகமாக வெளியிடங்களில் ஊர் சுற்ற வேண்டாம். தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நன்மை நடக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயங்களும் பயம் என்ற ஒரு வார்த்தையால், கைநழுவி செல்ல வாய்ப்புகள் உள்ளது. எதையுமே முயற்சி செய்யாமல் என்னால் இது முடியாது, அது முடியாது என்று பயந்து கொண்டே வாழ்ந்தால், நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்காது. துணிச்சலை கொண்டு வாருங்கள். எதிர்த்து போராடுங்கள் நல்லது நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். ஏதாவது ஒரு சிந்தனையில் நேரத்தை வீணடிக்க வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வீணாக ஊர் சுற்றும் நண்பர்களோடு, புறம் பேசும் நண்பர்களோடு இருக்கும் தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள். உடனடியாக உங்களுக்கு நன்மை நடக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். எதிர்கால சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சில பேருக்கு சுற்றுலா செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்று மனதிற்கு இதமான நாளாக அமையும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top