இன்றைய ராசிபலன் – 13 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 13 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். செலவுக்கு கவலையே இருக்காது. தேவைக்கு ஏற்ப பணம் வந்து பையை நிரப்பும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சியும் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. எந்த விஷயத்திலும் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. முதலில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பிறகு எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம். அடுத்தவர்கள் பேச்சை கேட்டு நேரத்தை செலவு செய்யாதீர்கள். தவறான பாதையில் உங்கள் வாழ்க்கையை மாற்றாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று ஆர்வத்தோடு செயல்பட்டால் இன்றைய நாள் முழுக்க உங்களுக்கு வெற்றி தான்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்காது. சில பேர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுவீர்கள். நிதி நிலைமை தான் பிரச்சனை. மற்றபடி உங்கள் ஆரோக்கியமும் வேகமும் விவேகமும் இன்று சூப்பராக வொர்க் அவுட் ஆகும். நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகளும் சிக்கல்களும் என்று வரும். ஆனால் உங்களுக்கு ஆதரவாக உயர் அதிகாரிகளும், குடும்பத்தில் இருப்பவர்களும் இருப்பார்கள். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தொழிலை விரிவு படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். லாபத்தையும் எடுப்பீர்கள். இன்றைய நாள் பிரச்சனைகளோடு, நிறைய அனுபவங்களை கொடுக்கும் நாளாக இருக்கப் போகிறது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உடல் அசதி இருக்கும். அன்றாட வேலை கொஞ்சம் பின் தங்கி இருக்கும். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா. இன்றைய ஏற்ற இறக்க சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள், வக்கீல் தொழிலில் இருப்பவர்களுக்கு, எல்லாம் என்று சிறப்பான பலன்கள் உண்டு. உங்களுக்கு திறமைக்கு ஏற்ப பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுபகாரிய தடைகள் விலகும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனவருத்தம் இருக்கும். ரொம்பவும் பிடித்தவர்களால் மனசு கஷ்டப்படக் கூடிய விஷயங்கள் நடக்கும். இதனால் பொறுமையை இழக்கக்கூடாது. ஓரிரு நாட்களில் பிரச்சனைகள் சரியாகிவிடும். நிதானத்தோடு இருங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு எந்த ஒரு புது முடிவையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எதிர் பார்த்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மரியாதையும் மதிப்பும் உயர்வும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் ஆர்வமாக இருப்பீர்கள். புதிய விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். தவறாக புரிந்து கொண்டிருந்த மேல் அதிகாரிகள், உங்களை சரியாக புரிந்து கொண்டு உங்கள் தகுதிக்கு ஏற்ப வேலையை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய முன்னேற்றம் தடைப்பட, உடன் இருப்பவர்களே காரணமாக இருப்பார்கள். லேசான மன வருத்தமும் இருக்கும். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் தொழிலிலும் நினைத்ததை விட முன்னேற்றம் அடையலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் இருக்கும். டென்ஷனை பொறுத்துக் கொண்டுதான் அன்றாட வேலையை செய்ய வேண்டும். ஆனால் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் பணிவு, உங்களுக்கான நல்லதை கொண்டு வந்து சேர்க்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top