மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்க்காத முன்னேற்றங்கள் வந்து சேரும். நீங்கள் கேட்காமலேயே நிறைய பேர் தேடி வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். இப்படி பல நன்மைகளை கொடுத்த இந்த நாளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாக கூடிய நாளாக இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்கள் கடமையிலிருந்து ஒருபோதும் தவற மாட்டீர்கள். உங்களுடைய வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். அயராது உழைப்பீர்கள். இதனால் நீங்கள் எதிர்பாராத பண வரவும் வெற்றியும் உங்களை நோக்கி வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும். சில பேருக்கு நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. முதலீட்டு விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்கவும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரம்மாண்ட வெற்றியை அடைவீர்கள். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாள் கோர்ட்டு கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். ஏதாவது பஞ்சாயத்து வைக்க வேண்டும் என்றால் இன்று வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் நல்லது நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி உங்களுடைய பொறுமை கொஞ்சம் கூட மாறாது. முன்கோபம் இருக்காது. எல்லாம் இறைவன் செயல் என்று இந்த நாளை நிதானமாக நகர்த்திச் செல்வீர்கள். கவலைப்படாதீங்க உங்களுடைய பொறுமையை உங்களுக்கான நன்மையை கொண்டு வந்து சேர்த்து விடும். அதற்காக அன்றாட கடமையில் இருந்து விலகி நிற்கக்கூடாது. பாத்துக்கோங்க. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். விடுமுறை நாள் என்பதால் வீட்டில் நீண்ட நாள் செய்யாமல் வைத்திருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு இன்று மன நிறைவான நாளாகவும் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். செலவுகள் குறையும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல உபசரிப்பு என்று ராஜ வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். வெளியிடங்களுக்கு சென்று குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும் அலட்சியம் வேண்டாம்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிரமங்களை கொடுக்கும். தேவையற்ற பிரச்சனைகள் வீடு தேடி வரும். வாக்குவாதம் வரும். முன்கோபம் வரும். இதையெல்லாம் சமாளிக்க உங்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை. எதிலும் அவசரப்படாதீங்க நிதானமாக இருங்க.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு உங்கள் வீடு தேடி வர போகிறது. வேலையில் அந்தஸ்து உயரும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரையோ பாட்னரையோ பகைத்துக் கொள்ளக்கூடாது. கவனம் தேவை.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் கையில் கொடுத்த வேலையை குறித்த நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். இதனால் நல்ல பெயரும் கிடைக்கும். விவேகத்தோடு செயல்படுவீர்கள். பேச்சு திறமை வெளிப்படும். சில பேர் இன்று சாதனையாளர்களாக கூட மாற வாய்ப்புகள் உள்ளது.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam