இன்றைய ராசிபலன் – 14 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 14 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். சந்தோஷம் தரக்கூடிய நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலை தொழில் எதிலும் பெருசாக டென்ஷன் இருக்காது. நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பிள்ளைகளாலும் மன மகிழ்ச்சி இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்களுடைய முயற்சிகள் அவ்வளவு எளிதில் வெற்றி அடையாது. அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதை இன்றைய நாள் தவிர்ப்பது நல்லது. அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். முன்பின் தெரியாத மூன்றாவது நபரிடம் எந்தசவகாசமும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடுவது, புதிய தொழில் தொடங்குவது இதுபோல உங்களுக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறவுகளோடு தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல், தடைகள் வரும். மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் சின்ன சின்ன தோல்வியை அடையும். அதனால் மனம் சோர்வடைய கூடாது. அன்றாட வேலையை கட்டாயம் எப்பாடுபட்டாவது முடித்து விட வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம், நாளைக்கு செய்து கொள்ளலாம் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் இருந்து அழித்து விடுங்கள். நல்லது நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நற்செய்தி உங்கள் செவிகளை எட்டும். அரசு வேலை செய்பவர்களுக்கு பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள், சின்ன சின்ன தோல்விகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பெருசாக டென்ஷனை தலைக்கு மேல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டாம். இன்று பிரச்சனைகளை மிகவும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பற்றி குறை பேச வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும் பிரச்சனைகளை சமாளிக்க கொஞ்சம் சிந்தித்து செயல்படவும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். நிதிநிலைமை சீராகும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கும் வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் அதிக கவனத்தோடு ஈடுபடுவீர்கள். உங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பை சொன்ன நேரத்திற்கு சரியாக முடித்து கொடுப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வருமானம் உயரும். சேமிப்பு உயரும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். பெருசாக எந்த அலைச்சலும் இருக்காது. நடக்க வேண்டிய வேலை எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். கெட்ட பழக்க வழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணம் அலைச்சலை கொடுக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சுறுசுறுப்பு குறைவாக காணப்படும். இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். ஏமாந்தால் அடுத்தவர்கள் உங்களை முட்டாளாக்கி விடுவார்கள். பார்த்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமை தேவை. அனாவசியமாக கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கக் கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான நிறைய வேலைகளை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நல்லபடியாக நடந்து முடியும். மனது ஆன்மீகத்தை நாடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கைக்கு நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நிதிநிலைமை சீராகும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top