
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்லது நடக்கும். பெரியவர்களின் ஆசியால் இன்றைய தினம் மன மகிழ்ச்சியுடன் நிறைவடையும். உறவுகளோடு ஒன்று சேர்ந்து இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளோடு கவனமாக பேசவும். வேலை செய்யும் இடத்தில் அனுசரணை தேவை. வியாபாரத்தை பொருத்தவரை போட்டி பொறாமை கூடாது. பார்ட்னரோடு வாடிக்கையாளரோடு வம்பு வழக்கு வைத்துக்கொள்ளக்கூடாது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு அமைதியாக இருக்கும். அமைதியான இந்த நாள் நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்கும். இறைவழிபாட்டால் மன நிம்மதி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அமைதியின் மூலமாக நீங்கள் இன்று நிறைய விஷயத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று ரொம்பவும் அசதி இருக்கும். கொஞ்சம் ஓய்வு எடுக்க நேரமும் கிடைக்கும். உறவுகளோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நற்செய்தி வந்து சேரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபதியாக இருந்த வேலைகள் இன்று சரியான நேரத்தில் நடந்துவிடும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். உடல் உபாதைகள் தீரும் நாள். ஆரோக்கியம் கிடைக்கும் நாள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். வேலைகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள். நிறைய பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வரும். இருந்தாலும் உங்களுடைய தன்னடக்கம் கொஞ்சம் கூட குறையாது. ஆசிரியர் தொழில் செய்பவர்கள் வக்கீல் தொழில் செய்பவர்கள் பிரபல்யமாக இருப்பவர்களுக்கெல்லாம் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மலிவு விலைகளில் பொருட்களை வாங்க வேண்டாம். மூன்றாவது நபர்களுடைய விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முதலிடும் செய்ய வேண்டாம். கூடுதல் கவனம் இருக்கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வரிசை கட்டி நிற்கக்கூடிய நாளாக இருக்கும். சில பேர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனைப்படி இந்த நாளில் வேலைகளை செய்வது நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மனக்கவலை இருக்கும். வேலையில் ஆர்வம் செலுத்த முடியாது. நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சலும் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அடுத்தவர்களை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்கள் மீது விழுந்த பழியை நீக்குவீர்கள். பொய்யாக உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இன்று நிறூபனம் ஆகிவிடும். மன நிம்மதி பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நாவடக்கம் தேவை. உறவுகளோடு எந்த விஷயத்தையும் கோபமாக பரிசீலனை செய்யக்கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சண்டை போடக்கூடாது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்க வேண்டும். பொறுமை தேவை. முன்கோபத்தை அறவே தவித்து விடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும் பதட்டமும் இருக்கும். ஆனால் பிரச்சனைகள் இல்லை. வேலையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். வியாபாரத்தையும் முன்னேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இறைவனின் அருள் ஆசியால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam