இன்றைய ராசிபலன் – 14 மே 2025

இன்றைய ராசிபலன் – 14 மே 2025

Qries


மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை, சண்டை சச்சரவு, வாக்குவாதம் இப்படியே நாள் போக வாய்ப்புகள் இருக்கிறது. வம்பு என்று தெரிந்தால் அந்த இடத்திற்கு போகாதீங்க. இன்று எதிரிகளைப் பார்த்தால் பதுங்கி செல்லலாம் தவறு கிடையாது. எதிரிகள் மீது பாய்வது தான் தவறாகும். பதுங்குவது பயத்தால் அல்ல. பதிலடி கொடுப்பதற்கு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இன்று அமைதி மட்டுமே உங்களுக்கு தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் முதலீடு செய்து வைத்திருந்த தொகையில் இருந்து ஒரு நல்ல வரவு கைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது. உபயோகமாக பணத்தை செலவு செய்ய வேண்டும். அனாவசிய செலவு வேண்டாம். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும். வேலை வியாபாரம் எல்லாம் எதிர்பார்த்த படி நல்லபடியாக செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி மன நிம்மதி பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சோம்பேறித்தனத்தை மட்டும் ஒதுக்கி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இன்று அமோக வெற்றி தான்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம். தொட்ட காரியத்தில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். எதிரிகளோடு முட்டி மோதி ஜெயித்து விடுவீர்கள். யாரையும் விட்டு வைக்க மாட்டீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் வருமே தவிர, எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக்கூடாது, கோபப்படக்கூடாது. பெரியவர்களின் பேச்சை தட்டிக் கழிக்க கூடாது. இளைஞர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். நிறைய பணம் கொடுத்து எந்த பொருளையும் வாங்க வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு பாசம் வெளிப்படும். காதல் வெளிப்படும். மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். நீங்கள் நினைத்த நல்ல காரியங்களை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராகும். கடன் சுமை குறையும். சுப செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வேலை வியாபாரம் எல்லாம் சரியாகத்தான் நடக்கும். இருந்தாலும் ஏதோ அடி மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். சஞ்சலமும் சலனமும் உங்களை நிம்மதியாக இருக்க விடாது. காலையிலேயே சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் தேவையற்ற மன கசப்புகள் விலகிவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும் நாளாக அமையப் போகிறது. வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாசல் கதவை தட்டும். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். வாழ்க்கை துணையிடம் சண்டை போடாதீர்கள். நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பங்கு சந்தை, முதலீடுகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீங்க. பேராசிக்கு மயங்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள். வியாபாரத்தில் பார்ட்னரோடு கவனமாக இருக்க வேண்டும். கணக்கு வழக்குகளை பார்க்கும்போது உஷாராக இருக்க வேண்டும். புது மனிதர்களை முழுமையாக நம்ப வேண்டாம். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் பிரச்சனை இருக்காது. வியாபாரத்திலும் பிரச்சினை இருக்காது. ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு பிரச்சனை செய்தால் மன நிம்மதி கெட்டுப் போகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணையோடு விட்டுக் கொடுத்த நடந்தால் நன்மையை நடக்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top