– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். விடுமுறை நாள் என்பதால் பெரிய டென்ஷன் இருக்காது. அந்தந்த வேலை அந்தந்த நேரத்தில் நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும், நான்கு வேலை சமைக்க கூடிய சூழ்நிலை வரலாம். பெண்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். முன்கோபடக்கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சில இடங்களில் கொஞ்சம் மழையாக இருக்கிறது. ஜாக்கிரதையாக இருங்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவோம். குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். அலட்சியமாக இன்றைய நாளை கடக்க வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன போட்டி பொறாமைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து பிரச்சனைகள் வரும். தொழிலில் போட்டி போட நான்கு பேர் வரிசை கட்டி நிற்பார்கள். உங்களுடைய வியாபாரத்தை கெடுக்கும் நோக்கத்தோடு சில பேர் வேலை செய்வார்கள். எதிரிகளை சமாளிப்பதில் கொஞ்சம் பிரச்சனை இருக்கும். இருந்தாலும் இறையருளால் உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஒரு துளி சந்தோஷம் கூட இன்றைய நாள் குறையவே குறையாது. அத்தனை மன நிம்மதி இருக்கும். இறையருள் கிடைக்கும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கு. ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதியால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலை என்றால் ஒரு பேனாவில் குறித்து வைத்துக்கொண்டு பிறகு அந்த வேலையை கவனமாக செய்து முடிக்கவும். வீட்டில் இருக்கும் பெண்கள், பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். எல்லா நல்ல பெயரும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இருந்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. சமாளித்து தான் ஆக வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன தடங்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. சுப காரிய வேலைகளை கூட நாளை தள்ளிப் போடுங்கள். புதுசாக ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் நாளை தள்ளிப் போடலாம். அன்றாட வேலையில் முழு கவனம் இருக்கட்டும். புது வேலையை நாளைக்கு ஒத்தி வைக்கவும். அவ்வளவுதான்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. முன்கோபம் கூடவே கூடாது. அடுத்தவர்கள் வேலையில் மூக்கை நுழைக்கக் கூடாது. அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசக்கூடாது. குறிப்பாக பெண்கள் இன்று மௌனவிரதம் இருப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. மாமியாரோட சண்டை போடவே போடாதீங்க ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆதாயம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற தேவையான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்வீர்கள். வேலையில் புதிய யுத்திகளை அறிமுகம் செய்து சிறப்பாக செயலாற்றுபீர்கள். புதிய விளம்பரம் செய்வது, புதுசாக வியாபாரத்தில் தள்ளுபடி கொடுப்பது, இப்படி உங்களுடைய சிந்தனை மேலோங்கி நிற்கும். திறமை வெளிப்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எல்லா வேலையும் லேட் ஆகும். தாமதத்தால் சின்ன சின்ன சிக்கல்கள் பிரச்சனைகள் வரலாம். ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முக்கியமான விஷயங்களை செய்து விடுங்கள். முக்கியமான வேலைகளை நாளை தள்ளி வைக்க கூடாது. வெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். அதிக மழை இருக்கக் கூடிய இடங்களுக்கு போக வேண்டாம். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் குறை சொல்ல நாலு பேர் இருப்பார்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு மனைவியின் ஆதரவு கிடைக்காது. சின்ன மன உளைச்சல் இருக்கும். சோம்பேறித்தனம் வரும். டென்ஷன் வரும். தலைவலி வரும். பொறுப்புகளை இறக்கி வைக்க முடியாத சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் இன்றைய நாளை பொறுமையோடு தான் கையாள வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மனைவியோடு வேலையை பங்கு போட்டுக் கொள்வீர்கள். நிதி நிலைமை சீராகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க உண்டான நேரமும் காலமும் கைகூடி வந்துவிடும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam