இன்றைய ராசிபலன் – 18 ஜனவரி 2025

இன்றைய ராசிபலன் – 18 ஜனவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்திற்கு எந்த குறைவும் இருக்காது. பண்டிகையில் ஒரு வாரம் வேலை செய்யாமல், விடுமுறையில் இருந்தால் கூட, இந்த நாளை சுறுசுறுப்பாக எடுத்துச் செல்வீர்கள். பெண்டிங்கில் இருக்கும் அத்தனை வேலைகளையும் முடித்து விடுவீர்கள். உங்களோடு சேர்ந்து வேலை செய்பவர்களையும் நன்றாக உற்சாகப்படுத்துவீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இரட்டிப்பாக கூடிய நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் நீங்கும். வீட்டில் இருக்கும் வேலைகளை பெண்கள் பம்பரம் போல செய்து முடிப்பீர்கள். பெரியவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குழந்தைகளுடைய எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லது நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெருசாக எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு கிடைக்கும். நல்ல உறக்கம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை தேடி தரும். கடன் வாங்க கூடாது. செலவை குறைப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். எதிர்பாராத நன்மை உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து பாராட்டுகளும் கிடைக்கும். வெளியிடங்களுக்கு சென்றால் அதிகமாக பேச வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது. அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போதும் போல இருந்தாலே நன்மை நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன போட்டி பொறாமை இருக்கும். அடுத்தவர்களை பார்க்கும்போது நம்மிடம் இது இல்லையே, நம்மால் ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியவில்லை என்ற ஏக்கம் வெளிப்படும். இதனால் உங்களுடைய வேலை பாதிக்கும். மனசு வருத்தப்படும். கவலைப்படாதீங்க கடவுளுக்கு தெரியும். யாருக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்று. முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்களுக்கான நல்லதும் நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாள். வேலையில் திறமைகள் வெளிப்படக்கூடிய நாள். பிரச்சனை செய்பவர்களையும் சரி செய்யக்கூடிய நாளாக இருக்கும். பேச்சு திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி புரிவீர்கள். பிரச்சனை என்று வந்தவர்களை நீங்கள் கைவிட மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் கோர்ட் கேஸ் வழக்குகளில் இருந்து பணம், இன்று உங்கள் கையை வந்து சேர வேண்டிய வருமானம் வந்து சேரும். சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சந்தோஷம் இரட்டிப்பாகும் பண பிரச்சனை தீரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். பலமுறை முயற்சி செய்தும் சில காரியங்களில் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. தோல்வி வந்தால் துவண்டு போகக்கூடாது. உற்சாகத்தோடு செயல்பட வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருட்டிப்பாகும் நாள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடந்து முடியும். சொந்த ஊரிலிருந்து அலுவலகப் பணிக்கு திரும்பியவர்கள், அவரவர் வேலையை நல்லபடியாக துவங்கி இருப்பீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெரும் பாராட்டும் புகழும் தேடிவரும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். எதிரிகளாக இருப்பவர்கள் கூட உங்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாள் மனபாரம் குறையும். வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவுக்கு கடன் வாங்காதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது வேலையை கற்றுக் கொள்வது, புது இடத்திற்கு சென்று, புது முயற்சிகளை மேற்கொள்வது, அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்று உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுற்றி இருப்பவர்களிடத்தில் நல்ல பெயரும் வாங்குவீர்கள். மன நிம்மதி இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக நிறைவேற்றிய திருப்தியும் கிடைக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top