– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக வலம் வருவீர்கள். உங்களுக்கான நல்ல பெயர் தேடி வரும். புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் பேச்சுக்கு சுற்று வட்டாரத்தில் ஒரு மரியாதை இருக்கும். உங்களுடைய பேச்சும் நடை உடை பாவணையும் இன்று அழகாக மாறிவிடும். அது எதனால், என்று யாருக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஆக மொத்தம் நீங்கள் இன்றைய தினம் ராஜாவைப் போல, ராணியை போல வாழலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பெருமையாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு வளம் வருவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களை வந்து சேரும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிட மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். வேலையில் இருந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சோதனை நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் ஒரு தடை வரும். கடவுளே எதற்கு என்னை இவ்வளவு சோதனை செய்கிறாய் என்று வாய் விட்டு புலம்பும் அளவுக்கு சில பல அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். கவலைப்படாதீர்கள், இறைவனை முழுமையாக நம்புங்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும். உழைப்பவர்கள் என்றுமே ஏமாற்றப்பட மாட்டார்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் வந்து போகும். சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்கு, இறைவன் சில சோதனைகளை வைத்து காட்டுவான். அதில் எல்லாம் நீங்கள் மீண்டு வர வேண்டும் என்றால் அயராது உழைக்க வேண்டும். மனம் துவண்டு போகக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் அமைதியான நாளாக செல்லும். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடக்கும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். வண்டி ஓட்டும் போது ஹெட்போன் அணிய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அடம்பிடித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக பணத்தை செலவு செய்யாதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியடையும் நாளாக இருக்கும். புது வேலையை துவங்க இந்த நாள் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நிதி நிலைமை சீராக இருக்கும். சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். வங்கி கடன் கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவி உங்கள் முயற்சிகளுக்கு சப்போர்ட்டாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் இருக்கும். தேவையற்ற மன கவலைகள் நீங்கும். அடுத்தவர்களை பற்றி சிந்திக்க கூடிய வேலையை நிறுத்தி விடுவீர்கள். இதனால் இரவு நல்ல உறக்கமும் இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கும்போது, கிடைக்கக்கூடிய மன நிம்மதியை அனுபவிப்பீர்கள். தினமும் இதேபோல வாழ வேண்டும் என்று உறுதி மொழியையும் மேற்கொள்வீர்கள். ஆன்மீகமும், அமைதியும் உங்களுக்கு நிறைய அனுபவத்தை கற்றுத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையும் நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். பண பிரச்சனை சரியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கையை வந்து சேரும். பெண் குழந்தைகளால் மனதிற்கு திருப்தி கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாரத்த அளவுக்கு எந்த நல்லதும் நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றம் வரும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். கொஞ்சம் டென்ஷன் தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எல்லா நாளும் எதிர்பார்த்தது நடக்காது. எல்லா நாளும் சுலபமாக எல்லா விஷயங்களையும் சாதிக்க முடியாது. ஆகவே ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாளை பக்குவத்தோடு நகர்த்திச் செல்லுங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam