
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. தெரியாத இடத்தில் உங்களை அறியாமலேயே போய் சிக்கிக் கொள்வீர்கள். தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள். உங்களை கேவலமாக பேசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு உண்டான அத்தனை சந்தர்ப்பங்களும் கிடைக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தையும் பெறுவீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு உண்டான கடன் தொகை கிடைக்கும். உங்கள் வியாபாரத்தின் விளம்பரம் பரபரப்பாக பேசப்படும். நிறைய பாராட்டுக்கு சொந்தக்காரர்களாக மாறிடுவீங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால் எல்லா வேலையும் சுறுசுறுப்பாக முடித்துவிட்டு நல்ல ஓய்வையும் எடுத்துக் கொள்வீர்கள். நல்ல சாப்பாடு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சுற்றியிருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சந்தோஷம் பிறக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பயணங்களின் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று திறமைசாலையாக நடந்து கொள்வீர்கள். யாராலும் செய்து முடிக்க முடியாத வேலைகளை நீங்கள் கையில் எடுத்து வெற்றியோடு செய்து முடிப்பீர்கள். நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் உங்கள் இடத்தில் இருக்கும். புது விஷயங்களை துவங்க இந்த நாள் நல்ல நாளாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இவர்களுக்கு எல்லாம் இன்று ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். மன நிறைவு உண்டாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் பின்னடைவு ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். அன்றாட வேலையை மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத மனக்கவலை இருக்கும். எப்போதோ நடந்த விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்த்து, நீங்களே கஷ்டப்பட்டு கொள்வீர்கள். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசுங்கள். பிடிக்காத விஷயத்தை சிந்தித்தால் நேரம் வீணாகும். செய்யும் வேலை கெடும் ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் புது மனிதர்களின் அறிமுகம், நிறைய புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். சுப செலவுகள் செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவையற்ற எதிரிகளின் தொல்லை விலகும். மௌனமாக இருப்பது மூலம் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். மௌனத்திற்கு உண்டான பலத்தை தெரிந்து கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை இருக்கும். கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கவலைப்படாதீங்க கடவுள் உங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உதவி செய்வார். இறைவனை நம்புங்கள். சோம்பேறித்தனம் இல்லாமல் வேலை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam